January 29, 2009

முத்துக்குமாரா! உன் குரல் கண்டம் கடந்தும் ஒலிக்கின்றது.


பத்திரிகையில் கருத்துப் பகிர்வு செய்து கருத்தாளனாய் இருந்து எம் உரிமைக்காய் குரல் கொடுத்து உன் உடலை கருக்கி உலகிற்கு வியம்பி விட்டு, பிரிந்து விட்ட தமிழ் உறவே. உன் செய்கை சரி என்றோ பிழை என்றோ விவாதிக்கும் நேரமில்லை. உன் எண்ணங்களை இமயம் போல் பரப்பி உன் தேசத்தின் மேல் நம்பிக்கையிழந்து, வார்த்தைகளில் வர்ணம் தீட்டி வரலாற்றை நமக்காய் எடுத்துரைத்து, நியாயத்திற்காய் குரல் கொடுத்து, அரசியல் சாக்கடையின் அர்த்தம் சொல்லி கேட்பாரின்றிருக்கும் என் தேச உறவுக்காய் உயிர் நீத்த உத்தமனே!


இரட்டை வேடம் போடும் இந்திய அரசின் மாயை உலகிற்கு எடுத்துரைத்து சென்றுவிட்டாய். உன் வார்த்தைகளின் ஆழம், அரசியல் தெளிவு, தூர நோக்குப் பார்வை கொண்ட ஒரு இனமானத் தமிழனை தமிழர்கள் இழந்து விட்டார்கள்.

நீ ஈழத்தான் மனிதில் என்றும் வாழ்வாய். உனக்காக வரலாற்றில் ஒரு இடம் நிச்சயமாக உண்டு. உன் உற்றாருக்கும் பெற்றோருக்கும், மற்றோருக்கும் உனை இழந்து வாடும் உறவுகளுக்கு ஈழத்தவர்கள் சார்பில் எனது ஆறுதல்கள்

"ஊன்றிப்படித்து...
உயிர்க்கொடை தந்தவன்
உணர்வுக்கு வலுசேர்ப்பீர்.! "


இந்த இளைஞனின் கோரிக்கை கீழே!

நன்றி : புதினம்
காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியை விடக் கொடுமையானது.

1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

2. ஐ.நா. பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.

3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள் மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.

6. ராஜீவ் காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம் காணப்பட வேண்டும்.

7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.

8. அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்.

9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்து வந்த தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.

10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக பொலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

13. தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத் தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

14. சுட்டுக்கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.

என்றும் அன்புடன்,

அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,
கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99

அருமைத்திமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி.

இவ்வாறு அந்த துண்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

8 comments:

அ.மு.செய்யது 1:11 PM  

நம் இனத்திற்காக உயிர் கொடுத்து போராட்டத்தை கூர்மையாக்க துணிந்த
இந்த போராளியின் நோக்கம் நிறைவேறுமா ??

ஹேமா 1:45 PM  

அரசிலுக்கு இல்லா மனிதநேயம் இளகிய மானுடத்துக்குள் மட்டுமே வாழ்வதை அறிவித்துப் போயிருக்கிறார் திரு,முத்துக்குமார் அவர்கள்.

காரூரன் 10:14 PM  

அ.மு.செய்யது,
தோழரே பொறுத்துத்தான் பார்க்கவேண்டும். முத்துக்குமாரின் இழப்பு பல எண்ண அலைகளை உருவாக்கி இருக்கின்றது. ஒருவர் உணர்வின் விழிம்பில் எடுத்த முடிவு தவறான அணுகுமுறையாயினும் ஒருவரின் மறைவின் பின் சிலர் தாங்கள் அறிவு ஜீவி போலும் அவர் முட்டாள்தனமாக நடந்து கொண்டதாக அணுக முயல்வது அவரின் உணர்வை கொச்சைப் படுத்துவதாக அமைந்துவிடும் என்பது என் கணிப்பு.

காரூரன் 10:16 PM  

ஹேமா,
உண்மைதான். வரவுக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

கமல் 4:43 AM  

நண்பா! நாங்கள் சபிக்கப்பட்ட இனம்?? நாளாந்தம் மடிந்து இறந்து போவதே எங்களுக்குக் காலம் வழங்கிய தண்டனை. எங்களுக்காய் உயிர் துறந்த உத்தமனுக்காய்த் தலை வணங்கிறோம்...

LOSHAN 12:55 PM  

ஒவ்வொரு தமிழனின் உயிரும் முக்கியமே..
எமக்காக அநியாயமாக மாயாதீர்..
திருந்தாத அரசியல் ஜென்மங்கள்-இரங்காத தலைமைகள்
உங்கள் இறப்பினாலும் திருந்தாது..

முத்துக்குமரனின் ஆன்மா சாந்தி அடையட்டும்


நாளை தமிழன் விடிவுக்காக
இன்று உங்கள் குடும்பங்கள் நடுத் தெருவுக்கு வருவதா?

வேண்டாம் தற்கொலைகள்.. தீக்குளிப்புக்கள்..

பல மரணம் பார்த்துவிட்டோம் இங்கே..
அங்கேயும் வேண்டாம் உயிர்ப் பலிகள்..

* நானும் பதிவிட்டுள்ளேன்.. எம்மால் முடிந்த ஒரு சிறு அஞ்சலி;நன்றி;மரியாதை;காணிக்கை.

காரூரன் 10:48 AM  

நன்றி லோசன்,உங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும்.

*\\பல மரணம் பார்த்துவிட்டோம் இங்கே..
அங்கேயும் வேண்டாம் உயிர்ப் பலிகள்..\\*
யதார்த்தமான வார்த்தைகள்.

காரூரன் 10:49 AM  

ஆமாம் கமல் சாபக்கேடா என்று எண்ணத்தோன்றுகின்றது.

Blog Widget by LinkWithin

அறி(வு)முகம்!

என்றும் எப்போதும் இங்கு வருவோர்க்கு இன்முகமாய் உங்கள் அறி(வு)முகம்!

எங்களின் வாழ்க்கை எங்கே????

நினைவுகளோடு பயணித்த படி நிஜங்களைத் தேடுபவர்களில் நானும் ஒருவன்!

  © Free Blogger Templates Spain by Ourblogtemplates.com 2008

Back to TOP