August 25, 2007

குறுந்தீவுப் பயணம்.


















நாமே ஈழத்தீவில் இருந்து வந்திருக்கிறோம். இல்லை, நாம் சப்த தீவுகளில் ஒன்றிலிருந்து வந்து இருக்கின்றோம் என்று கூற, இன்னும் சிலர் உலகத்திலேயே பெரிய தீவு அவுஸ்திரேலியா என்று சொல்ல இன்னும் சிலர் அது கண்டம் என்று மறுப்பு சொல்ல, நானும் எனது குறுந்தீவு பயணத்தை சொல்ல முயற்சிக்கிறேன்.
























இது ஒன்ராரியோ (Ontario) மாநிலத்தில் முஸ்கோகா (Muskoka) என்ற நகரத்திலுள்ள ஒரு சிறிய தீவு தான். ரொறன்ரோ (Toronoto) நகரத்திலிருந்து சுமார் 240 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளது. இது ஒரு குன்று ( சிறிய மலை மாதிரி) சுற்றி வர கீலி லேக்(Healy Lake). இந்த தீவில் வாழ்வோர் காலத்தை வென்றோர் என்று தான் சொல்ல வேண்டும். இவர்கள் வீட்டு முற்றதிலும் கீலி லேக், வீட்டு பின் பக்கதிலும் கீலி லேக்.கோடையில் வீட்டு முன்பக்கமாக வள்ளத்தை பாவித்து வருவார்கள். வின்ரரில்( winter) ஸ்னோ மொபைலை (snow mobile) பாவித்து வீட்டு பின்பக்கமாக வருவார்கள்.






















தண்டவாளம் மாதிரியான ஒரு அமைப்பை செய்து அதில் இறங்கு துறையிலிருந்து பொருட்களை மேலே வீட்டுக்கு கொண்டு செல்வார்கள். வீட்டுக்கு வெளியே சிறிய வீடு ( Out house) மதிரியான அமைப்பு முறைகளும் உண்டு.





















வீட்டிற்கு பல படிகள் ஏறி தான் செல்ல வேண்டும். இப்படியான வாழ்க்கை முறைகளை கொண்டுள்ளவர்கள் எவ்வளவு தூரம் தங்களை முன்கூட்டியே தயார் படுத்தி கொள்ள வேண்டும் என்று எண்ணி பார்க்க வேண்டும். ரொறன்ரோ நகரத்திலிருப்போர் சிலர் குழந்தைக்கு பால்மா முடிந்து விட்டது என்று, தூக்கத்தில் இருக்கும் கணவனை நடுநிசியில் கலைக்கும் வாழ்க்கை முறையும் நம்மவர் மத்தியில் இருக்கின்றதை மறுக்கமுடியாது.


















இந்த வீடுகள் அனேகமாக மரத்தினால் மட்டும் அமைக்கப்பட்ட கட்டமைப்பு கொண்டவை. அடர்த்தியான மரங்கள் சூழ ஆற்றங்கரை ஓரத்தில் வீட்டு வாசலில் குடும்பத்துடன் இனிமையான தென்றல் எம்மை வருட இயற்கையை ரசித்து வாழும் வாழ்க்கை என்றும் பசுமையானது. சுமார் 146 குடிமனைகளே இந்த தீவில் இருக்கின்றது. ஓரளவிற்கு எல்லோரும் எல்லோரையும் தெரிந்த ஒரு கிராம அமைப்பு.












மீன் பிடித்தல் இங்கு உள்ள எல்லோரதும் பொழுதுபோக்கு. உண்மையாக சொன்னால் மீனை பிடித்து மீண்டும் நீரிலேயே மீனை ஓடவிடுவார்கள். எந்த ஒரு உயிரினமும் இயல்பாக்கம் அடையும் என்று சொல்வார்கள். இதற்கு மீன் என்ன விதி விலக்கா, அதற்கு ஏற்ப மனிதனும் வித்தியாசம் வித்தியாசமான முறைகளை கையாளுகின்றான்.
தூண்டிலில் மண்புழுக்களை போட்ட காலம் போய். மீன்களை பாதிக்காத செயற்கை புழு, மீன் குஞ்சுக்கள் போன்றவற்றை பாவிக்கிறார்கள்.















பொதுவாக தீவில் வாழும் மக்கள் உபசரிப்புக்களில் மிகவும் சிறந்து விளங்குவார்கள் என்று ஊரிலும் ஏன் கனடாவிலும் கேள்விப்பட்டிருக்கின்றேன்.இதே மாதிரி இந்த தீவிலும் மக்கள் மிகவும் உபசரிப்புடன் நடந்து கொள்வதை பார்க்க மனதிற்கு உற்சாகம் ஊட்டுவதாக இருந்தது.
















பல வேற்று இன மக்கள் வாழும் இந்த தீவில் மக்கள் எவ்வளவு ஒற்றுமையாக வாழ்கிறார்கள் என்று என்னை அழைத்து சென்றவர் பெருமையாக சொன்னார். ஆனால் நம்மில் சிலர் ஒரே ஊரில் இருந்து வந்து ஒற்றுமையில் வேற்றுமை காண முயல்வது நம் மனங்களை சற்று கனக்க வைக்கின்றது















இங்குள்ள குழந்தைகளுக்கு நீர் விளையாட்டுக்களுக்கு குறைவே இல்லை. பெற்றோர் மிகவும் ஒத்துழைப்பாக இருக்கின்றார்கள்.


















சுமார் 10 மணி நேரம் எப்படி போனது என்பது தெரியாமல், மறக்க முடியாத ஒரு நாளை கழித்த மனக்களிப்புடன் நானும் எனது நகரத்திற்கு திரும்பினேன்.

Read more...

August 14, 2007

சமூகக் கண்ணோட்டம்

நான் சொன்னால் நம்பமாட்டியள், கனடாவிலை தமிழர்களின் விழாக்களுக்கு குறைச்சல் இல்லை பாருங்கோ. இதுக்குள்ள ஆளாளுக்கு போட்டி பாருங்கோ. ஒரு சிலர் சொல்லுவினம் நாங்கள் தேசியத்திற்காக செய்யிறம் என்றும் இன்னும் சிலர் உள்ளூர் கலைஞர்களை வளர்க்கிறதுக்கெண்டும் சொல்லுகினம். இன்னும் சிலர் மக்களை திருப்திபடுத்த வெளிநாட்டு கலைஞர்களை கொண்டு வந்து செய்யிறம் என்கினம்.

தேசியம், தேசியம் பற்றிய எண்ணங்கள் வளரோணும் அதிலை மாற்று கருத்தில்லை. இந்த மாதிரி நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்களை மக்களுக்கு கொண்டுபோய் சேர்க்கிறதிற்கு ஊடகங்கள் பெரும் பங்காற்றுகின்றன.
இதிலை பெரிய புதினம் என்னவென்றால் எல்லா நிகழ்ச்சிகளை பற்றியும் எல்லா ஊடகங்களிலும் காசு கொடுத்தாலும் போடமாட்டினம்.தாங்கள் நடத்துகின்ற நிகழ்ச்சிக்கு போட்டி என்று நினைத்தால் அது சகோதர அமைப்பாக இருந்தாலும் இருட்டடிப்பு தான்.

இந்த மாதிரியான நடவடிக்கைகள் ஒரு ஊடகத்தின் பொதுக்கோட்பாடுகளுக்கு முரணானதும் சிறுபிள்ளைத்தனமானதுமான நடவடிக்கையாகும். இவ்வூடகங்களில் உள்ளோர் தாம் கனடிய நீரோட்டத்திலுள்ள ஆங்கில ஊடகங்களுக்கு நிகராக வள்ர்ந்து விட்டதாக மார் தட்டவும் மறப்பதில்லை.

இந்த மாதிரியான நடவடிக்கைகளுக்கு தாங்கள் மக்கள் ஊடகம் என்பதை மறந்து ஒரு சில தனிப்பட்டவர்களின் முடிவுகளுக்கு கேள்வி கேட்க யாருமில்லை என்ற ஒரு எண்ணமோ அல்லது தாம் வளர்ந்து விட்டோம் இனிமேல் ஒருவருடைய தயவும் தேவையில்லை என்ற எண்ணமோ?

நானறிய, சுமார் 12 ஆண்டுகளுக்கு மேலாக கனடிய மண்ணில் தேசியம் சம்பந்தமான பல விழாக்களை வெற்றியாக நடத்திய ஒருவர் தனது புத்தக வெளியீட்டு விழாவிற்கு விளம்பரம் தர ஒரு தேசிய நீரோட்டதுடன் இருக்கும் பத்திரிகை ஆசிரியர் அனுமதி மறுத்துவிட்டார்.

இப்படியான போட்டிகளும் பொறாமைகளும் ஈழத்தமிழர்களாகிய எங்களுடைய விடிவுக்கு ஒரு தடைக்கல்லாக அமைந்து விடுகின்றது.
நாம் ஒரு முக்கியமான கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம், எல்லாத்தமிழர்களையும் ஒருமுகப்படுத்தி கொண்டு செல்லவேண்டிய கடமை எல்லா தமிழ் ஊடகங்களுக்கும் உண்டு.

Read more...
Blog Widget by LinkWithin

அறி(வு)முகம்!

என்றும் எப்போதும் இங்கு வருவோர்க்கு இன்முகமாய் உங்கள் அறி(வு)முகம்!

எங்களின் வாழ்க்கை எங்கே????

நினைவுகளோடு பயணித்த படி நிஜங்களைத் தேடுபவர்களில் நானும் ஒருவன்!

  © Free Blogger Templates Spain by Ourblogtemplates.com 2008

Back to TOP