பொன் மொழி, பொன் விழி அழகுதான்...
அடடா ஆரம்பிச்சுட்டாங்க, பொண்ணுங்களை வர்ணிக்க...., இல்லைங்க..., இப்படித்தான் இந்த தமிழ் மென் பொருட்களை தயாரித்தவரின் மனைவியும் அவர் அடிக்கடி தொலை பேசியில் பேசிக் கொள்வதை கேட்டு விட்டு குழம்பியிருக்கின்றார்.
புலம் பெயர்ந்த ஈழத்தமிழரின் 8 வருட உழைப்பில், தமிழக மென்பொருள் விற்பன்னர்களுடன் இணைந்து படைத்த பொன் பேனா, பொன் மொழி, பொன் விழி என்ற மூன்று தமிழ் மென்பொருட்களை பற்றிய அறிமுகமே இந்த கட்டுரை.
பொன் பேனா:
கணணியின் தட்டச்சு இயக்கியினூடாக தமிழ் தட்டச்சு செய்வதற்கு பதிலாக, எழுத்துப் பலகை எனப்படும் ( tablet padச்) மூலம் அதனுடன் வரும் பேனாவால் தமிழில் எழுதும் போது கணணியில் எழுத்துருக்களாக வரும். இதன் மூலம் தமிழ் தட்டச்சு செய்யமுடியாதவர்களும் கணணியில் தமிழில் கட்டுரை எழுதவோ பிரசுரிக்க முடியும். "ல", "ள", "ழ" போன்ற எழுத்துப் பாவனைகளை அகராதியில் ஆராய்ந்து சில தெரிவுகளையும் மென் பொருள் தருகின்றது. தமிழ், "தமில்" போல் தத்தளிக்காமல் இத் தகவல் வலையில் தமிழாக வலம் வர வசதியாக இருக்கும்.
பொன் மொழி:
தமிழில் எழுத்துப் பிழைகளில்லாமல் எழுதவும், எந்த தமிழ் எழுத்துருவையும் (TAM, TAB, Unicode) எந்த தட்டச்சு முறையையும் பாவிக்குமுறையில் அமைந்துள்ள மென்பொருள். அகராதி, பழமொழிகள் போன்றவையும், ஆங்கிலம் மூலம் தமிழ், தமிழ் மூலம் ஆங்கிலம் போன்ற அணுகுமுறைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளது. பாமினியில் எழுதியதை இன்னொரு எழுத்துருவிலே மாற்றக் கூடிய இலகுத் தன்மை. இந்த புலொக் எழுதுபவொருக்கு உதவியாக இருக்கும். இது எழுத்துகளை கோர்க்கும் ஒரு கோவையாக தன்னிச்சையாக தொழிற்படுகின்றது.
பொன் விழி:
ஏற்கனவே தட்டச்சு செய்த விடயங்களை ஸ்கான்னர் அல்லது கணணியில் தொலை நகல் மூலம் கிடைக்கப் பெற்றவற்றை எழுத்துருக்களாக மாற்றம் செய்கின்றது . Optical Character Recognition (OCR) என்ற தொழில் நுட்பம் மூலம் தமிழ் எழுத்துருக்களை அடையாளம் காணும் தொழில் நுட்பம் இந்த பொன் விழியில் வடிவம் பெற்றிருக்கின்றது. கை
யெழுத்தை அடையாளப் படுத்தும் அளவிற்கு இந்த மென் பொருள் செய்யப்பட்ட வில்லை.
பொன் பேனா, பொன் மொழி, பொன் விழி என்ற மென்பொருள்கள் தமிழ் தகவல் ஊடகத்திற்கு உறுதுணையாக இருக்கும். இது முதல் வெளியீடு என்பதால் பல நுகர்வோர் அனுபவங்கள் வேண்டப்படுகின்றன. இந்த மென்பொருளை எழுதியவர் அளித்த வானலை பேட்டியிலிருந்து....
Anuraj Pon mozhi release.wav - GTR
இந்த இளம் மென் பொருள் தயாரிப்பாளர் வருங்காலங்களில் தமிழ் பேச்சு மூலம் தமிழ் எழுத்துருக்களை கொண்ட ஆவணங்களாக்க கூடிய மென்பொருளை கொண்டுவருவதாக கூறியிருந்தார்.
மேலதிக தகவல்களுக்கு http://www.pontamil.com
உங்கள் எண்ணங்களையும் தாருங்கள்.
9 comments:
நல்ல பயனுள்ள பதிவு காரூரன்.
நன்றி !!!!!!
தமிழை வளர்க்க அரும்பாடுபடும் உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.
மிக மிகத் தேவையான பதிவு.தமிழ் எழுதத் தத்தளிக்கும் எங்களை போன்றோருக்கு கை கொடுக்கும் பெரும்பொருள்.ஜீவராஜா அனுராஜ் அவர்களுக்கு பராட்டுக்களும் நன்றியும்.தமிழின் வளர்ச்சிக்கு இவர்கள் போன்றோரின் சேவைகள் தேவையான ஒன்று.அதுவும் புலம் பெயர்ந்த தேசங்களில் இவர்கள் எங்கள் பொக்கிஷங்கள் என்றேதான் சொல்ல வேண்டும்.காரூரன் அடையாளம் கண்டு எங்களோடும் பகிர்ந்து பயன்பெறச் செய்தமைக்கு உங்களுக்கும் மிக்க நன்றி.
\\நல்ல முயற்சி... தமிழார்களுக்கு வரபிரசாதம்....
அ.மு. செய்யது,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்!
இரவீ,
உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றிகள்.
வாங்க ஹேமா,
தமிழ் சார் தொழில் நுட்பம் வளர்வதற்கு பங்களிப்போரின் எண்ணிக்கை குறைவு தான். இது பண வருவாய் ஏற்படுத்தும் ஒரு அணுகுமுறையாக இல்லாதது தான் காரணம். உலகளாக ரீதியில் உள்ள தமிழ் சார் தொழில் நுட்ப வல்லுனர்களுடன் பேசுவதற்கு எனக்கும் சந்தர்ப்பங்கள் கிடைத்தன. என்னால் இயன்றளவு இவர்கள் முயற்சி மக்களை சென்றடையும் வகையில் ஏதாவது என்னால் முடிந்த முயற்சிகள் செய்து கொண்டு தான் இருக்கின்றேன். புலம் பெயர்ந்த தமிழனாக நாம் செய்ய வேண்டியவை நிறையவே இருக்கின்றது. உங்கள் கருத்துக்கும் ஊக்கத்திற்கும் நன்றி.
கவின்,
நன்றி உங்கள் ஊக்கத்திற்கு!
காரூரன் காலத்தின் தேவையறிந்த பணி... வாழ்த்துகள் அனுராஜ் அவர்களுக்கு. மிக்க நன்றிகள் உங்களுக்கு.... நல்ல கேள்விகள்... பல பயனுள்ள விடயங்கள்.... அதுவும் தமிலர்களுக்கு இன்றைய உலகில் தேவையான ஒன்றினைத் தந்திருக்கிறார் படைப்பாளர்....சுருங்கக் கூறின் இனித் தரணியெங்கும் தமில் இல்லை... தமிழ் தான்,
Post a Comment