December 30, 2008

திருமணம் ‍ எதிர்பார்ப்புக்களும் எதிர்பாராதவையும்...ஆயிரம் காலத்துப் பயிர் என்றும், சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுவது என்று திருமணங்கள் சொல்லப் பட்டாலும் தகவல்களால் நிரம்பிய உலகத்தில் குழப்பங்கள் தானா? என்று எண்ணத் தோன்றுகின்றது. நண்பர் கமலுக்கு கல்யாண ஆசை வந்திட்டுது போல எல்லாரட்டையும் திருமண முறிவு ஏன் ஏற்படுது என்று கேட்டிருக்கின்றார்.

சேர்ந்து வாழுவதற்கு காரணம் தேடிய காலம் போய், இன்று பிரிந்து வாழுவதற்கு காரணம் தேடுகின்றார்களோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

1) விவாகரத்து இன்றைய உலகில் அவசியம் தானா?? அல்லது விவாகரத்துப் பெறுவது இன்றைய உலகில் ஓர் நாகரிகமாகிவிட்டதா???

திருமணம் என்றால் என்ன? எனக்கு எப்படி ஒரு வாழக்கைத்துணை வேண்டும் என்றும் ஒரு தெளிவு இருக்க வேண்டும். ஒரு ஆண், பெண்ணின் குண இயல்பு என்ன?, அவளுக்குரிய காலச்சக்கரத்தில் அவளின் பிரச்சனை என்ன என்று தெளிவும், பெண்ணுக்கு ஆணைப் பற்றிய அறிவும் இருக்க வேண்டும். குடும்பம் என்றால் என்ன அதன் நன்மைகள் என்ன ஒரு தெளிவு இருக்கவேண்டும்.

உதாரணத்திற்கு, கறுப்பின மக்கள் அமெரிக்க மண்ணிற்கு தெற்காசிய மக்களை முன் வந்திருந்தாலும், அறிவியல் துறைகளில் அவர்களின் வீதம் குறைவு. இதற்கான அடிப்படை காரணம், விவாகரத்து அதிகமாக கறுப்பு இனத்தில் இருப்பதாலும், குழந்தைகள் தாய் அல்லது தந்தை என்று ஒருவரிடம் மாத்திரம் வளர்கின்றதால் என்று சில ஆய்வுகள் சொல்கின்றது.

ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதற்கு மேற்குலகில் திருமணம் என்ற ஒன்று அவசியமில்லை. மேல் நாட்டு சட்ட திட்டங்கள் பிரிந்து வாழ்வதற்கான வழிமுறைகளையே ஊக்குவிக்கின்றன. டாகடர் பெம்பிளை வேண்டும் என்றால் அதற்கான விட்டுக் கொடுப்புகளுக்குத் ஆண் தயாராக இருக்க வேண்டும்.

தாம்பத்திய வாழ்வில் சுவாரசியமும், பிடிப்பும் இருவருக்கும் இடையில் இருக்கும் நிலை இருந்தால் பல சிக்கல்களுக்கு தீர்வு வந்து விடும். குழந்தை பிறந்த பின் தன்னைப் பற்றி கண்டு கொள்ளாமல் ஏனோ தானோ என்று ஒரு பெண் நடந்து கொள்வதாலும் குடும்பங்களில் குழப்பம் உருவாகின்றது.

நம் வாழ்க்கையில் தேர்வு செய்யும் வாழ்க்கைத்துணையில் தான் எமது 90% மான சந்தோசமும், கஸ்டமும் தங்கியிருக்கின்றது என்கின்றார் ஒரு மேற்கத்தேச அறிஞர். விட்டுக் கொடுத்து வாழத் தெரியாதவர்களின் இறுதி நிலை விவாகரத்துத் தான்.

2) பெரும்பாலும் இந்த விவாகரத்திற்குக் காரணமாக இருப்பவர்கள் யார்???

கோபம் வந்தால் அதிகம் பேசுபவர்கள் பெண்கள், மெளனித்து விடுபவர்கள் ஆண்கள் அதனால் எது காரணம் என்று நான் சொல்ல வரவில்லை. உத்தியோகம் புருச லட்சணம் என்பார்கள். ஆண்கள் "தான் ஆண் என்ற ஆதிக்கமும்" ஆனால் பெண்ணின் உழைப்பில் தங்கியிருக்கும் நிலை இருந்தால் தாழ்வு மனப்பான்மையும் ஒரு காரணம். நான் தனித்து வாழலாம் என்ற மேலோங்கிய எண்ணமோ அல்லது என்னை அவர் கண்டு கொள்வதில்லை என்ற மன அங்கலாய்ப்போ விவாகார ரத்துக்கு காரணம்.

"கற்பாம் மானமாம் கண்ணகியாம் சீதையாம், காசிருந்தால் வாங்கலாம்" என்ற எண்ணப்பாடுகள் கூட விவாகரத்தில் தான் போய் முடியும். ஒரு ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை நேசிக்கலாம், பழகலாம் ஆயினும் நான் தான் அவர் மனைவி என்ற தெளிவு இருக்க வேண்டும். அவர் என்னை விட்டு விட்டு போய் விடக்கூடாது என்ற அளவுக்கு மிஞ்சிய கட்டுப் பாடுகளை ஆணுக்கு பெண் விதித்தாலும் நிலைமை கவலைக்கிடம் தான்.

அழகான மனைவி வேண்டும் என்று எடுத்து விட்டு, அவளை சந்தேக கண்ணுடன் பார்க்கும் ஆண்களாலும் இந்த நிலை தான். ஆண் பெண் இரு பாலாருக்கும் இடையில் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை தான் காரணம். திருமணத்தின் முன் உறவை வைத்திருக்கும் ஆணோ அல்லது பெண்ணோ அப்பாவித்தனமாக வருகின்ற வாழ்க்கைத் துணையிடம் தம் அனுபவங்களை ஒப்பிட முயன்றாலும் நிலைமை கவலைக்கிடம் தான்.

3) விவாகரத்தினூடாக எதிர்காலச் சந்ததிகளின் வாழ்க்கை முறை கட்டியெழுப்பப் படுகின்றதா??? இந்த விவாகரத்தின் மூலம் எதிர்காலச் சந்ததிகளிற்குக் கிடைப்பவை என்ன??? அவற்றுக்கான காரணம் என்ன???

தன்னம்பிக்கை இல்லாததும், சமுதாயத்திற்கு சவாலாக அமைந்து விடும் இளையவர்களை தான் திருமண முறிவுகள் ஏற்படுத்துகின்றன. தந்தை உலகத்தை பார்க்கும் விதமும், தாய் உலகத்தை பார்க்கும் விதமும் வேறு , இவை இரண்டும் குழந்தைக்கு தேவையாம்.

உளவியலும், சமூகவியலும் தான் ஒரு மனிதனை சம்பிரதாயங்களுக்குட்பட்ட மனிதர்களாக வாழ வழிவகுக்கின்றது. ஆனால் சமுதாயத்தை வெறுக்கின்ற அல்லது அதன் நம்பிக்கை இல்லாத இந்த சந்ததியனர், தம் செய்கைகளை நியாயப் படுத்துபவர்களாகவும், மற்றவர்களின் உணர்ச்சிகளை மதிக்கத் தெரியாதவர்களாகவும் வாழ ஆரம்பித்து விடுகின்றார்கள்.

தனித்தாயின் வளர்ப்பில் வளரும் பெண் குழந்தைகள், தாய்க்கு ஏன் இந்த நிலை உருவானது? ஆண்களுக்கு நான் அடி பணியக் கூடாது என்ற ஆண்களுடன் போட்டி போடும் கலாச்சாரமாக வளர்ந்து விடுகின்றாள்.

4) விவாகரத்து எம் தமிழ்ச் சமூக அமைப்பில் அதிகரித்துச் செல்வதைக் குறைக்க ஏதேனுன் வழிமுறைகள் உள்ளனவா?? உங்கள் பார்வையில் ஏதேனும் தீர்வுகள் உள்ளனவா??? நீங்கள் இது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்???

புரிந்துணர்வை வளர்க்க வாய்ப்புகள் உருவாக வேண்டும். திருமணமான நண்பர்கள் குடும்பங்களாக ஒன்று கூடும் போது மனம் விட்டு பிரச்சனைகளை பேசும் போது இது எல்லா வீட்டிலும் நடக்கும் விடயம் அதை பெரிது படுத்தக் கூடாது என்று தெளிவு வரும். பெண்கள் நம்பிக்கையான தோழிகளிடம் கட்டில் முதல் தொட்டில் வரையுள்ள அனுபவங்களை பகிரும் போது பல விடயங்களில் தெளிவு உருவாகின்றது.

நமக்கு கீழ் உள்ளவர்களின் வாழ்க்கைத் தரத்தையும் அறியும் பக்குவம் இருப்பின் எமக்கு ஒரு திருப்தி உண்டாகும். உங்களை ஒருவர் எப்படி நேசிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்களோ அதைப் போல் அவரையும் நேசிக்கப் பழக வேண்டும். தீர்வு என்று ஒருவரியில் சொல்ல ஒன்றுமில்லை.

அப்புக்குட்டி மாதிரி ஆக்களுக்கு நான் பதில் சொல்லுவதை விட உளவியல் நிபுணர் டாக்டர் சாலினி அனைத்துலக தமிழ் வானொலிக்கு வழங்கிய செவ்வியில் பெண்களின் உளவியல் பற்றி நல்லாச் சொல்லிய்ருக்கின்றார். உங்களுக்காக உங்கு எடுத்து போட்டிருக்கின்றன். முழுதாக கேட்டு முழு மனிதராக குடும்பம் குட்டி என்று சந்தோசமாக வாழ்கின்ற வழியைப் பாருங்கோ.


DR. Shalini Women Concerns and Solutions.wav - Dr. N. Shalini

உங்கள் பார்வையயும் தாருங்கள்.

14 comments:

மெல்போர்ன் கமல் 11:28 PM  

ம்... வேண்டுகோளை ஏற்றுப் உடனடியாகப் பதிவு போட்டமைக்கு நன்றி.... நல்ல ஆக்க பூர்வமான சிந்தனைக் கருத்துக்கள்... அது சரி ஏன் எல்லோரும் இளைஞர்கள் தான் விவாகரத்துக்கு காரணம் என்கிறீர்கள்??? முதியவர்கள்? அது சரி எனக்கு கலியாண ஆசை ஒன்றும் இல்லைங்க.....நல்ல கண்டு பிடிப்பு... வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் காரூரன்..

அப்புக் குட்டி! 11:30 PM  

என்ன காரூரன் அண்ணை எல்லாம் அனுபவமோ??? அது சரிங்க அது அது அவனுக்கு வந்தால் தான் தெரியும்??? நீர் பாட்டுக்கு மனைவியோட சந்தோசமா இருந்து கொண்டு விளக்கம் கொடுப்பீர்.. நாங்கள் மட்டும் என்னவாம்???? வலிக்குது அண்ணா.

அப்புக் குட்டி 11:34 PM  

அப்பு காரூரன் என்ன நக்கலோ மோனை???? இஞ்ச பாரும் உது சும்மா பம்மாத்து??? எப்பிடி என்னால மட்டும் குடும்பம் குட்டி என்று சந்தோசமா வாழ முடியும்??????????? பெண்களுக்கு எப்ப விட்டுக் கொடுக்கிற பண்பு வருகிறதோ அப்பத் தான் நாங்களும் எங்கள் முடிவை மாற்றிக் கொள்ள முடியும்???????

Ravee (இரவீ ) 2:22 AM  

//தம் செய்கைகளை நியாயப் படுத்துபவர்களாகவும், மற்றவர்களின் உணர்ச்சிகளை மதிக்கத் தெரியாதவர்களாகவும் வாழ ஆரம்பித்து விடுகின்றார்கள்//

//விட்டுக் கொடுத்து வாழத் தெரியாதவர்களின் இறுதி நிலை விவாகரத்துத் தான். //

மிகவும் நுட்பமான ஆய்வு மற்றும் கருத்து, நன்றி.

காரூரன் 3:40 PM  

வாங்க கமல்,
என‌க்கு தெரிந்தளவு கிறுக்கியிருக்கின்றேன். மற்றவர்களையும் எழுத தூண்டுங்கள். பல எண்ணங்கள் சேர்ந்தால் தெளிவு உண்டாகும். உங்கள் கருத்துக்கு நன்றி.

காரூரன் 3:58 PM  

வாங்க அப்புக்குட்டி,

*\\பெண்களுக்கு எப்ப விட்டுக் கொடுக்கிற பண்பு வருகிறதோ அப்பத் தான் நாங்களும் எங்கள் முடிவை மாற்றிக் கொள்ள முடியும்??????? \\*

மேய்க்கின்றது மாடுகளைத்தான். ஆனால் மனிதர்களை மேய்க்கக் கூடாது. பொறுமையாக டாக்டர் சாலினியின் பேட்டியை கேளுங்கள். புல்லரிச்சா பொறுத்துங்க....., ஆடுற மாட்டை ஆடி கறக்கணும், பாடிக்கறக்கின்றதை பாடிக் கறக்க வேண்டும் என்பார்கள்.
வள்ளுவரே நொந்து போய்
"இல்லானை இல்லாளும் வேண்டாள், ஈன்றெடுத்த தாயும் வேண்டாள் செல்லாது அவன் வாயிற் சொல்" என்று சொல்லியிருக்கின்றார்.

உங்கள் கருத்துக்கு நன்றிகள்.

காரூரன் 3:59 PM  

வாங்க இரவீ,

உங்கள் கருத்துக்கும் ஊக்கத்துக்கும் நன்றிக

ஹேமா 7:47 PM  

மிக மிக ஆரோக்யமான பதிவு.அப்புக்குட்டி கேட்டால் வாழ்க்கையில உருப்படுவார்.
வாழ்க்கையென்றால் நிச்சயம் விட்டுக்கொடுப்பும் புரிஞ்சுகொள்கிற தன்மையும் தேவை.அப்புக்குட்டி ஒருவேளை வேற யாரையாவது நினைச்சிட்டாரோ!

காரூரன் 12:50 AM  

வாங்க ஹேமா!,
உங்களுக்கு தகவல்கள் ஆரோக்யமாக இருப்பதில் மகிழ்ச்சி. தேடல்கள் தெளிவையும் உற்சாகத்தையும் தரும் என்று நம்புவர்களில் நானும் ஒருவன். கமலின் அழைப்பிற்கான உங்கள் கருத்துக்களையும் பதிவாக தாருங்கள்.
கருத்துப் பகிர்வுக்கு நன்றிகள்.

அப்புக் குட்டி 5:00 AM  

காரூரன் said...
வாங்க அப்புக்குட்டி,

*\\பெண்களுக்கு எப்ப விட்டுக் கொடுக்கிற பண்பு வருகிறதோ அப்பத் தான் நாங்களும் எங்கள் முடிவை மாற்றிக் கொள்ள முடியும்??????? \\*

மேய்க்கின்றது மாடுகளைத்தான். ஆனால் மனிதர்களை மேய்க்கக் கூடாது. பொறுமையாக டாக்டர் சாலினியின் பேட்டியை கேளுங்கள். புல்லரிச்சா பொறுத்துங்க....., ஆடுற மாட்டை ஆடி கறக்கணும், பாடிக்கறக்கின்றதை பாடிக் கறக்க வேண்டும் என்பார்கள்.
வள்ளுவரே நொந்து போய்
"இல்லானை இல்லாளும் வேண்டாள், ஈன்றெடுத்த தாயும் வேண்டாள் செல்லாது அவன் வாயிற் சொல்" என்று சொல்லியிருக்கின்றார்.

உங்கள் கருத்துக்கு நன்றிகள்.//


ஜயோ அண்ணை நல்லா சென்ரி மென்ராப் போட்டுத் தாக்குறியள்... கலக்கல் தா,,,, அதே வள்ளுவர் தான் இதுவும் சொன்னாருங்கோ... இடுக்கண் வருங்கால் நகுக...... தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை.....
என்னங்கோ அண்ணை மாடென்டாலும் ஆடிக் கறக்காலம்.... இது மனிசரெல்லோ.....என்ன புலுடா அண்ணை....ம்....நல்லா தமிழ் படிச்சிருக்கிறீங்கள்..... ஜயோ எனக்குப் புல்லரிக்கேல்லை..... சும்மா அவா சொல்றா என்றதுக்காக நான் விவாகரத்து செய்யாமல் இருக்க ஏலுமே/???? என்ன பொம்பிளையளில பிழை இல்ல என்று சொல்ல வாறீங்கள் போல... நல்லா மனுசிக்குப் பயந்திட்டீங்கள் போல... பிறகு சாப்படு கிடைக்காது தானே.... உண்மை வாயிக்கை இருக்கு,,, பயம் சொல்லத் தடுக்குது,,,,,என்ன சரிதானே..... அப்ப நான் வரட்டே.....

தமிழன்-கறுப்பி... 10:00 AM  

புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணன்...

காரூரன் 1:29 PM  

தம்பி அசத்திறீங்க,
அப்ப எப்படி "ஒரு பெண்மையிடம் தோற்றவன்" என்று போட்டிருக்கின்றீர்கள்.
கலைஞர் நடையில் சொல்வதானால்,
" புலி மானை வேட்டையாடும் இடம் காட்டில், மான் புலியை வேட்டையாடுமிடம் கட்டில்" என்பார்.
நீங்கள் பெண்மையிடம் தோற்கவில்லை, ஒரு பெண்ணிடம் இருக்கலாம்.

இரசிக்கத் தெரிந்த உன்னை,
பரிசுத்தமாய் ஒருத்தி காதலிக்கும் வரை,
இயற்கையை இரசி.

உன் தோழ்களை தழுவும் வாழ்க்கைத் தோழி வரவும்
உன் எண்ணங்கள் வெற்றி பெற ஒரு அண்ணனின்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

அப்புக் குட்டி 2:33 PM  

காரூரன் said...
தம்பி அசத்திறீங்க,
அப்ப எப்படி "ஒரு பெண்மையிடம் தோற்றவன்" என்று போட்டிருக்கின்றீர்கள்.
கலைஞர் நடையில் சொல்வதானால்,
" புலி மானை வேட்டையாடும் இடம் காட்டில், மான் புலியை வேட்டையாடுமிடம் கட்டில்" என்பார்.
நீங்கள் பெண்மையிடம் தோற்கவில்லை, ஒரு பெண்ணிடம் இருக்கலாம்.

இரசிக்கத் தெரிந்த உன்னை,
பரிசுத்தமாய் ஒருத்தி காதலிக்கும் வரை,
இயற்கையை இரசி.

உன் தோழ்களை தழுவும் வாழ்க்கைத் தோழி வரவும்
உன் எண்ணங்கள் வெற்றி பெற ஒரு அண்ணனின்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்//
அண்ணா எனக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்துச் செய்கிற நிலையில இருக்கிறன்...அதுக்க இன்னொரு கல்யாணத்திற்கு வாழ்த்துக்களா???? நீங்கள் எனக்கா பதில் சொல்லியிருக்கிறீங்கள்??? //

புரியல அண்ணை, எனக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்துச் செய்கிற நிலையில இருக்கிறன்...அதுக்க இன்னொரு கல்யாணத்திற்கு வாழ்த்துக்களா???? நீங்கள் எனக்கா பதில் சொல்லியிருக்கிறீங்கள்??? புரியல, யாரப்பா பெண்மையிடம் தோற்றவன்?? அப்பிடி எப்ப இந்தக் கிழவன் சொன்னனான்??? சும்மா சொல்லக் கூடாது நல்லா யோசிக்கிறீங்க.....

காரூரன் 3:10 PM  

அப்புக்குட்டி ஐயா,

*\\புரியல அண்ணை, எனக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்துச் செய்கிற நிலையில இருக்கிறன்...அதுக்க இன்னொரு கல்யாணத்திற்கு வாழ்த்துக்களா???? நீங்கள் எனக்கா பதில் சொல்லியிருக்கிறீங்கள்??? புரியல, யாரப்பா பெண்மையிடம் தோற்றவன்?? அப்பிடி எப்ப இந்தக் கிழவன் சொன்னனான்??? சும்மா சொல்லக் கூடாது நல்லா யோசிக்கிறீங்க.....\\*

நான் எழுதியது இன்னொருவாருக்கு ( தமிழன்‍ ‍_ கறுப்பிக்கு). இப்ப எனக்கு விளங்குது, உப்பிடி லொள்ளு பண்ணினால் எவள் உம்மோடை குடும்பம் நடத்தப் போறாள், தமிழ்ச் சிலேடையின் பலனை இங்கு பார்க்கின்றேன். அடுத்த நிகழ்ச்சிக்கு அடுத்த லொள்ளை தயார் செய்யும். அப்ப வரட்டே!

Blog Widget by LinkWithin

அறி(வு)முகம்!

என்றும் எப்போதும் இங்கு வருவோர்க்கு இன்முகமாய் உங்கள் அறி(வு)முகம்!

எங்களின் வாழ்க்கை எங்கே????

நினைவுகளோடு பயணித்த படி நிஜங்களைத் தேடுபவர்களில் நானும் ஒருவன்!

  © Free Blogger Templates Spain by Ourblogtemplates.com 2008

Back to TOP