February 1, 2009

மாதங்கி மாயா அருள் பிரகாசம் ( M.I.A) வன்னி மக்களுக்காக குரல் எழுப்பியுள்ளார்!


உலகப் புகழ் பெற்ற ஒஸ்கார்(Oscar) விருதுக்கும், கிறாமி (Grammy) விருதுக்கும் தெரிவு செய்யப்பட்டோர் தெரிவில் இருக்கும் தமிழிச்சி தானும் ஒரு அகதி, தான் பெறும் விருதை விட போரினால் பாதிக்கப் பட்டிருக்கும் தமிழ் மக்களிற்கான ஒரு தீர்வே முக்கியம் என்கின்றாள். மேற்குலகில் இசைத்துறையில் தனக்கென்று அடையாளத்தை வைத்திருக்கும் ஒரே ஒரு தமிழ் உறவு, நமக்காக எப்போதும் குரல் எழுப்பி வருகின்றாள்.




தந்தையின் பேரில் "அருளர்" என்றும், தாயின் பேரில் "கலா" என்ற இசைத் தொகுப்புக்களை தந்து தனக்கென்று இசைத்துறையில் அடையாளம் பெற்றுவிட்டவள், பிரித்தானிய குடியுரிமையுள்ளவள், தமிழ் தன் அடையாளம் என்று வியம்பி நின்றதால் அமெரிக்கா ஒரு இசை நிகழ்வுக்கு செல்ல இருந்த போது அனுமதி மறுக்கப் பட்டாள். அப்போது கனடிய மண்ணிற்கு வந்த பொழுது கனடிய பிரதான ஊடகமான CBC இன் THE HOUR என்ற பிரபல்யமான நிகழ்வில் மனம் விட்டு தான் தமிழ் என்ற அடையாளத்தை அடித்துக் கூறுகின்றாள்.

அமெரிக்கரின் "watch list" இலிருந்ததால் தான் அனுமதி மறுக்கப் பட்டது என்று பேட்டியாளருக்கு சொல்கின்றார்கள்.
கீழே உள்ள பேட்டியை பாருங்கள்.




இந்த மாயா முதல் 10 வருடங்களை பல இன்னல்களின் மத்தியில் ஈழத்திலும், இந்தியாவிலும் வாழந்தவள். தந்தை நம் ஈழப் போராட்டத்துடன் இணைத்துக் கொண்டவர். இவர் தாயார் அவள் குழந்தையாக இருக்கும் போதே எம் பிரச்சனையை சொல்லி வளர்த்திருக்கின்றாள். தாய் துணி தைத்து கொடுத்து வருமானம் தேடி வளர்த்திட, வெட்டிய மிஞ்சிய துணிகளில் விளையாடி மகிழ்ந்தவள். இலண்டனிற்கு புலம் பெயர்ந்து இசைத்துறையில் படித்து படிப்படியாக பல தடைகளைத் தாண்டி வந்துள்ளாள்.

Vakthaa.tv வீடியோவை பார்க்க‌ இங்கே அழுத்தவும்..



இசைத்துறையில் நாட்டம் கொண்ட பாடகர், கிற்றார் இசை விற்பன்னர் Ben Brewer என்பவரை தன் வாழ்க்கைத் துணையாக தெரிவு செய்து தாய்மை அடைந்து கிறாமி விருது நாளில் குழந்தை பெறத் தயாராகிக் கொண்டிருக்கின்றாள். மற்றவர்கள் ஆசுபத்திரி சென்று குழந்தை பெறுவதை தவிர்த்து, வீட்டில் நீச்சல் குழத்தில் குழந்தையை பெற்றுக் கொள்ள விரும்புவதாக கூறுகின்றாள். ஈழத்தில் எந்த வசதியுமில்லாமல் முகாம்களில் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் போது இது எல்லாம் ஒரு வலியாகத் தெரியாது என்கின்றாள்.

நம்மினம் மிருகங்களை விட கேவலாமான முறையில் உண்ண உணவில்லாமல், தங்க இடமில்லாமல் சுனாமியால் பாதிக்கப்பட்ட காலத்திலும் இலங்கை அரசு எந்த உதவியும் செய்யாமல் ஜேர்மனிய நாசிச காலங்களை விட மோசமானது என்று மேற்குலகிற்கு அடித்துச் சொல்கின்றாள்.

"PAPER PLANES" என்ற பாட்டிற்கு "Slumdog Millionaire" என்ற படத்தில் வந்ததிற்காகத்தான் விருது பெற தெரிவுக்குழுவின் குறுகிய தெரிவுக்குள் தெரிவாகியுள்ளாள். அவள் பாடல்களில் துவக்கு சுடும் சத்தம் எழுப்பப்படுவதைப் பற்றி கேட்கப் பட்டபோது, துவக்குச் சத்தம் என் வாழ்வியலுடன் கலந்துவிட்ட ஒன்று, புலம் பெயர்ந்தவர்கள் போரினால் பாதிக்கப்பட்டோர் எல்லோர் காதிலும் ஒலிப்பது இது. எங்களை நோக்கிச் சுடுவதை பார்த்தும் கேட்டும் பழகிவிட்டோம், பிடிக்காவிட்டால் சுடுபவர்களிடம் போய் சொல்லுங்கள் நிறுத்தச் சொல்லி!.

I fly like paper, get high like planes
if you catch me at the border i got visas in my name
If you come around here i make em all day
i get one down in a second if you wait

புலம் பெயர்ந்து வந்தவர்களின் கதையை நாசூக்காக சொன்ன பாடல் இது.



அமெரிக்க அரசின் பயங்கரவாத்திற்கு எதிரான போர் என்று அல்கேடாவை அழிப்பதாக ஈராக்கில் ஒரு மில்லியன் மக்களை அழிப்பது , மற்ற அரசுகளுக்கு குறிப்பாக இலங்கை அரசு கண்மூடித்தனமாக தமிழர்களை அழிக்க வழிவகுத்தது. அமெரிக்க அரசு பொறுப்புடன் நடக்க வேண்டும் ஒபாமாவின் அரசு அதற்கான முனைப்புகளை செய்யும் என நினைக்கின்றேன், என்கின்றாள்.

காலத்தின் கட்டாயம் கருதி நமக்காக குரல் கொடுக்கும் ஒரு உறவுக்கு விருதுகள் கிடைப்பதையிட்டு நாமும் பாராட்டி, மேலும் சிறக்க வேண்டி நிற்போம்.



13 comments:

Anonymous 6:55 PM  

She is talented musician of this era. I am glad that she still remember her roots. She is a real role model for indian musicians. Even A.R.Rahuman quoted about her. Thanks for making the webbers aware.

Good bless her.

குப்பன்.யாஹூ 7:42 PM  

she should get the award, lets pray for her .

kuppan_yahoo

தேவன் மாயம் 8:24 PM  

உலகப் புகழ் பெற்ற ஒஸ்கார்(Oscar) விருதுக்கும், கிறாமி (Grammy) விருதுக்கும் தெரிவு செய்யப்பட்டோர் தெரிவில் இருக்கும் தமிழிச்சி தானும் ஒரு அகதி, தான் பெறும் விருதை விட போரினால் பாதிக்கப் பட்டிருக்கும் தமிழ் மக்களிற்கான ஒரு தீர்வே முக்கியம் என்கின்றாள்.///

வேர்களை மறக்காத அவர் பாராட்டுக்குரியவர்.

சக்(ங்)கடத்தார் 12:30 AM  

ம்... நல்லா தான் இளசுகள் எங்கடை பிரச்சினையைப் போட்டுத் தாக்க வெளிக்கிட்டிருக்குதுகள்.. எல்லாரும் தமிழ் என்ற குறுகின வட்டத்துக்கை இருக்காமல் ஆங்கிலம் மூலமும் எங்கட கருத்துக்களைப் பரப்ப வேணும். பொடிச்சிக்கு இந்தப் பழசின்ர வாழ்த்துக்கள்.

Anonymous 8:51 AM  

ஈழத்தின் அவலத்தையும், இதனை காணுற்றும் காணாததுபோல் பாசாங்காக இருக்கும் உலக முகத்தின் மூக்கில் முட்டியதுபோல் இருக்கிறது மாயாவின் அணுகுமுறை.
இளவயதில் நெஞ்சில் விழுந்த கனல் பெரியவராகும்போதும் கனல்வது நெகிழ்சி தருகிறது.
மாயா மூலம் கலை உலகை உலுக்கும் மிகப் பெரிய ஆயுதம் என்பது மீண்டுமொருமுறை நிறுவப்பட்டுள்ளது.
தொடரட்டும் அரிய பணி. பாராட்டுகள்!

ஹேமா 10:31 AM  

எங்கு எப்படித்தான் வாழ்ந்தாலும் எங்கள் வேர்களை எங்கள் உறவின் உயிர்களை மறக்கவே முடியாது.உணர்த்திவிட்டார் மாயா.அவரின் உயர்வுக்கு வாழ்துக்கள்.என்றும் எங்கள் உறவுகளுக்கு உதவியாய் இருங்கள் மாயா.

காரூரன் 10:11 PM  

வாங்க அனோனி, குப்பன்_யாஹூ,

உங்களுடைய கருத்துக்கு நன்றி.

காரூரன் 10:13 PM  

வாங்க தேவன்மயம்,

உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றிகள்.

காரூரன் 10:14 PM  

வாங்க சக்கடத்தார்,
இடைக்கிடை எட்டி பாருங்கோ, உசாரா தொடர்ந்து எழுதுங்கோ!

காரூரன் 10:16 PM  

முகிலன்,
அடிக்கடி வாங்கோ, முதல் தடவை முற்றம் வரை வந்ததுக்கு நன்றிகள்.

காரூரன் 10:18 PM  

ஹேமா,

அம்மணி நலம் தானே, வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றிகள்.

BOOPATHY 5:55 PM  

நானும் பார்த்தேன் காரூரன், ஓர் தமிழ் பெண்ணின் வளர்ச்சியும், இளைய சமுதாயத்தின் நாட்டுப் பற்றையும் பார்க்கும்போது பெருமையாத்தான் இருகின்றது.
இப்படிபட்ட நல்ல தகவல்களை வெளியிடும் உங்களது சேவையும் பாராட்டத்தகும்

மே. இசக்கிமுத்து 4:53 AM  

தமிழர்கள் எங்கு இருந்தாலும் தம் மண்ணை மறக்காமல் இருக்கிறார்களே..அது தான் தமிழ் மணம்...

Blog Widget by LinkWithin

அறி(வு)முகம்!

என்றும் எப்போதும் இங்கு வருவோர்க்கு இன்முகமாய் உங்கள் அறி(வு)முகம்!

எங்களின் வாழ்க்கை எங்கே????

நினைவுகளோடு பயணித்த படி நிஜங்களைத் தேடுபவர்களில் நானும் ஒருவன்!

  © Free Blogger Templates Spain by Ourblogtemplates.com 2008

Back to TOP