கனடிய பாராளுமன்றத்தில் ஈழப்பிரச்சனை தொடர்பான அவசர விவாதம் நடைபெற்றது.
கனடிய தமிழர்களின் குரலுக்கு செவிமடுத்து அவசர விவாதத்தை இன்று இரவு Feb 4த் நடத்தினார்கள். காரசாரமாக பல தகவல்களுடன் ஈழப்பிர்ச்சனை ஆராயப் பட்டது. கனடா உலகத்தில் சமாதானத்துக் கான தூதுவ நாடு, இலங்கை விடயத்தில் மௌனமாக இருக்கின்றது என்ற வினாக்கள் பல பாராளுமன்ற உறுப்பினர்களால் முன் வைக்கப்பட்டுள்ளது.
மதிப்புக்குரிய Jim Karygiannis M.P , Scarborough- Agincourt என்றவரின் முயற்சியிலை கனடாவில் தமிழருக்கான அவசர விவாதம் இன்று தான் நடை பெற்றது. கனடா இந்த விடயத்தில் அக்கறை எடுக்க வேண்டியதின் முக்கியத்துவத்தையும் எம் மக்கள் அன்றாடம் படும் கஸ்டத்தையும் விளக்கியிருந்தார்.
3 மில்லியன் பணத்தை கொடுப்பதுடன் நின்று விடாமல் பாதிக்கப் பட்ட மக்களுக்கு அது சென்றடைய வேண்டும். போர் நிறுத்தத்திற்கான அழுத்தத்தை உடனடியாக இலங்கை அரசுக்கு கொடுக்க வேண்டும். சமாதானத்திற்கான தீர்வை எட்டுவதற்கு கனடா முக்கிய பங்கு வகிக்க வேண்டும். கனடாவிலுள்ள குடும்பங்களுடன் அவர்களுடைய உறவுகள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் இழுத்தடிக்கப் படாமல் அதிகாரிகளை அதிகரித்து உடனடியாகச் செய்யப் படவேண்டும். வெறும் வார்த்தை அளவில் இல்லாமல் செயல் அளவிலும் நாம் இருக்க வேண்டும் என்றார்.
பல M.P. க்கள் விவாதத்தில் கலந்து கொண்டார்கள். பல தரப்பட்ட விவாதங்கள் முன் வைக்கப்பட்டது. U.N போன்றவை பெரிய அமைப்புக்களாய் இருந்தும் இலங்கை விடயத்தில் எதுவும் செய்து விடவில்லை. கனடா போன்ற நாடுகள் U.N இனூடாக ஒரு தீர்மானத்தை எடுத்து இலங்கை விடயத்தில் தலையிட வேண்டும். ஒரு உறுப்பினர் தன் உரையில் தமிழர்கள் கனடிய நீரோட்டத்தில் பல்வேறு துறைகளில் முன்னேறியிருக்கின்றார்கள், எனக்கு தெரிந்த நண்பர் லோகன் கணபதி ( மார்க்கம் மா நகராட்சி உறுப்பினர்) அவர் மனைவி மருத்துவராக இருக்கின்றார் என்று உதாரணமிட்டு பேசினார்.
ஒரு உறுப்பினர் தன் உரையில், இது அறிவுசால் ஆய்வு விவாதம் அல்ல, மனித அவலம் சம்பந்தமானது எனவே அந்த கோணத்துடன் பார்க்கப் படவேண்டும் என்றார். அவர் நியுயோர்க் டைம்ஸ் உட்பட பல பத்திரிகைகளை மேற்கோள்காட்டி, அரசு கிழக்கில் விடிவை எற்படுத்தியதாக சொல்லி அங்கும் அடக்குமுறையில் ஈடுபடுவதாகச் சொன்னார். அம்னெஷ்டி, Human Right Watch, பல நிறுவனங்கள் இதைப் பற்றி மறுக்கமுடியாத பல அறிக்கையை சொல்லியிருக்கின்றன.
இடம்பெயர்ந்துள்ள 300,000 மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்வதற்கான முயற்சிகள் உடனடியாகச் செய்யப்பட வேண்டும் என்றார், சிறுபான்மையினம் அடிப்படை உரிமைகளுடன் வாழ்வதற்கான நிரந்தர தீர்வு ஏற்படுத்தப் படவேண்டும். புலிகளை அழித்து விட்டால் தீர்வு வந்து விடாது, அது இன்னும் 30 வருடங்களுக்கு பிரச்சனையை கொண்டு செல்லும்.
அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனை கொன்று சமாதனத்திற்கான சந்தர்ப்பத்தை இலங்கை அர்சு அழித்துவிட்டது. பல பத்திரிகையாளர்கள், சமூக சேவகர்கள் கொல்லப் பட்டுள்ளார்கள். கனடிய தூதரகம் வெறும் அறிக்கையுடன் நின்றுவிடாமல் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
கனடியத் தமிழர்கள் தொடர்ந்து அவர்கள் M.P க்களை தொடர்பு கொண்டு உடனடியாக அழுத்தம் கொடுக்க வேண்டும்.
எனது M.P யார்? அவரை எப்படி தொடர்பு கொள்வது?
அ) Call this toll free 1-800-622-6232 ( 8 AM - 8 PM)
ஆ) Use this Web address and key in your postal code. Get the contact info.
http://www2.parl.gc.ca/Parlinfo/Compilations/HouseOfCommons/MemberByPostalCode.aspx?Menu=HOC
இது போல் எல்லா நாட்டிலும் உள்ள தமிழர்கள் அவர்கள் அரசுகளை வற்புறுத்த வேண்டும். தொடர்ந்து அயராது உழைப்போம்!
கனடிய பாராளுமன்ற ஈழப்பிரச்சனை 4:30 மணி நேர விவாதத்தை ஆங்கிலத்தில் பார்க்க இங்கே அழுத்தவும்.
6 comments:
தகவலுக்கு நன்றி காரூரன்.
எனது பதிவில் இணைப்பைக் கொடுத்துள்ளேன்.
நன்றி வலைப்பூக்கள்
சந்திரவதனா,
இணைப்பு கொடுத்தமைக்கு நன்றிகள். எனது கிறுக்கலும் உங்களைப் போன்ற மூத்த வலைப் பதிவர்களை கவர்ந்ததையிட்டு மகிழ்ச்சி. வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.
நல்ல பயனுள்ள தகவல்கள்.. இவற்றின் பலாபலன்களைப் பொறுத்திருந்து தான் பார்க்க முடியும்.
உலகம் நீதிக்காக என்றோ ஒரு நாள் தலை சாயும் என்பது தான் அனைவரினதும் நம்பிக்கை.
நல்ல செய்தி.
நன்றி கமல், இசக்கிமுத்து
Post a Comment