நீங்களும் மேற்குலகில் மருத்துவம் கற்றுக் கொள்ளலாமா?
மேற்குலகில் மருத்துவம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற கனவை நனவாக்குவதற்கு பல சிரமங்கள் உண்டு. கீழைத் தேசங்களில் 12ம் வகுப்பு முடிந்த பின் ஒரு தேர்வுப் பரீட்சை எடுத்த பின்பு M.B.B.S படிக்க தகுதி பெற்றுக் கொள்ளலாம். ஆனால் மேற்குலகில் குறைந்தது 2 வருடங்கள் பல்கலைக்கழகத்தில் படித்து, MCAT தேர்வில் சிறப்பாகச் செய்து, நேர்முகத் தேர்வு ஒன்றிற்கு அமர்ந்து அதில் தெரிவுக் குழுவை திருப்திப் படும் பட்சத்தில் தான் மேற்கொண்டு படிக்கும் வாய்ப்பு உண்டு.
நீங்கள் எந்த வயதிலும் மருத்துவத்துறையில் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு உண்டு. தென் ஆபிரிக்காவிலிருந்து உளவியலில் முனைவர் பட்டம் பெற்றவர் வந்து கனடாவில் Doctor of Medicine ( M.D) பட்டம் பெற்று மருத்துவராக கடமையாற்றுகின்றார்.
பொறியியலாளரும், வழக்கறிஞரும் மருத்துவம் கற்றுக் கொள்ள வாய்ப்புக்கள் இருக்கின்றது. இங்கு மருத்துவ பீடம் கிடைக்காதவர்கள் கனடாவில் இருந்து இந்தியா சென்று படித்துக் கொள்கின்றார்கள். அவர்கள் பின்பு கனடாவில் சில பரீட்சைகள் எடுத்து தான் வேலை செய்ய வேண்டும்.
IMHO ( International Medical Health Organization) என்ற தன்னலமற்ற சேவை நிறுவனம், மருத்துவர்களை ஒன்றிணைத்து ஈழத்தில் அன்னலுறும் மக்களுக்கு உதவி வருகின்றார்கள். இந்த கனடாக் கிளையின் இளைஞர்களை இணைக்கும் டாக்டர் கண்ணா வேலா கொடுத்துள்ள பேட்டியில் மருத்துவம் படிக்க இளையவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று கருத்துப் பகிர்வு செய்திருக்கின்றார். கேட்டுச் சொல்லுங்கள்.
Dr. Kanna Vela Interview - GTR
3 comments:
Good info for young generation. try to bring other fields as well.
மருத்துவத்தின் மகத்துவம் பற்றிய கருத்துக்கள். அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் இவை. ஒரு மனிதனது வாழ்வில் நேரத்தை எப்படி எடுத்துக் கொள்வது, பொன்னான நேரத்தை எவ்வாறு மண்ணாகாமல் பார்ப்பது முதலான விடயங்களை மிக மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறா. நேர்காணல் இயல்பான உரையாடல் முறையில் அமைந்துள்ளது. வாழ்த்துக்கள் அறிவிப்பாளருக்கும், மருத்துவருக்கும்.
keep it up......
Post a Comment