வாகனமும் பாவனையும்!
அவசரமாக இயங்கி கொண்டிருக்கும் இவ்வுலகில் நாம் நேரத்தை மிகவும் கருத்தில் வைத்து வாழ வேண்டியதாகியிருக்கின்றது. நேரம் தான் பணம் என்று சொல்லும் அளவிற்கு முக்கியத்துவம் அடைந்துவிட்டது.
அன்றாட வாழ்க்கையின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல வேண்டிய அவசியமாகிவிடுகின்றது. ஊரில் துவிச்சக்கர வண்டியில் ( சைக்கிள்) தான் பல இடங்களை சென்று வந்திருக்கின்றோம். ஒரு சிலர் மோட்டர் சைக்கிளை உபயோகித்து வந்தனர். பொது வாகன சேவைகளும் போக்குவரத்துக்கு பாவிக்கப்பட்டிருக்கின்றன. நானும் எனது பாடசாலை நாட்களை சைக்கிளில் தான் போய் வந்தேன்.
எனக்கு படிப்பித்த tution master இரத்தினசபாபதி மாஸ்டர் ( சாக்கர் பட்டப் பெயர் _ முன்னாள் ஹாட்லி கல்லூரி அதிபர்) எப்போதும் நடை பவனியில் வந்து தான் பாடம் சொல்லி தந்தவர். ஒருவருடைய வாகனத்திலும் ஏறி வந்ததில்லை. என்னை மிகவும் கவர்ந்த ஆசிரியர் இவர் தான்.
ஆனால் கனடாவில் நம்மவர்களுக்கு அரை மைல் தூரத்திலுள்ள கடைக்கு போவதென்றால் கூட கார் தேவைப்படுகின்றது. கனடா குளிர் நாடு தான், ஆனால் சூடான கால நிலையுள்ள காலப்பகுதி தான் அதிகம். கார் இங்குள்ளவர்களுக்கு சைக்கிள் மாதிரி தான் .
என்னுடன் வேலை பார்க்கும் கனடியர்(Brian Huntley) ஒருவரை பற்றி, அவருடைய வாழ்க்கை முறை, அவருடைய தேவைகள் எதிர் பார்ப்புகள் எப்படி இருக்கின்றது என்பதை ஒரு வித்தியாசமான பார்வைக்காக தருகின்றேன்.
இவர் கனடிய கடற்படையில் விமான ஓட்டியாக இருந்துவிட்டு, பல ஆண்டுகள் சேவையிலிருந்து விட்டு இப்போது தகவல் தொழில் நுட்பத்தில் வேலை செய்கின்றார். இவர் சேவையிலிருக்கும் போது ஓட்டாத வாகனம் என்று ஒன்றும் இல்லை. ஆனால் இவரிடம் தற்போது உள்ள ஒரு வாகனம் சைக்கிள் தான். இவர் வேலைக்கு எப்போதும் சைக்கிளில் தான் வருவார். பூச்சியத்திற்கு கீழ் 40 பாகையாக இருந்தாலும் சைக்கிளில் தான் வருவார். பொழுது போக்காக கூட சைக்கிள் பயணம் தான்.
அவரிடம் பல தடவை மனம் விட்டு பேசியுள்ளேன். அவருக்கு வரலாறு, மற்றும் பல்வேறு தொழில் நுட்பம் பற்றிய அறிவு இருக்கின்றது. ஆனாலும் நடை முறை வாழ்க்கையில் தனது தேவைகளை மிகவும் ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்ப்பவர். வேலை சம்பந்தமாக பல தொழில் நுட்பங்களை கையாண்டாலும் ஒரு கைத்தொலை பேசி கூட சொந்தமாக பாவிப்பதில்லை ( வேலைக்காக Black Berry). இதற்காக காசு மிச்சம் பிடிக்கிறார் அல்லது வசதிகளை பெற வருவாயில்லை என்று தப்பாக எண்ணி விடவேண்டாம்.
இவர் தன் விடுமுறையை பெரும்பாலும் சைக்கிளில் புதிய இடங்களை வலம் வருவது தான் இவரது பொழுது போக்கு. இவர் அண்மையில் ஒன்ராரியோ மாகாணத்திலுள்ள ஐரோப்பிய நகரங்களை சைக்கிளில் வலம் வந்தார். எனக்கு இப்படி நகரங்கள் ஒன்ராரியோவில இருப்பது இவர் மூலம் தான் தெரிய வந்தது
City | Country |
---|---|
Paris | France |
London, Belfast, Tottenham | UK |
Brussels | Belgium |
Formosa | Portugal |
Hanover | Germany |
Zurich | Switzerland |
சிலோன் என்று ஒரு சிறிய கிராமமும் இருக்கின்றதாம். சிலோன் என்ற பெயர் போர்த்துக்கேயர் இலங்கைக்கு வைத்த பெயர்.
படம் , வரை படம் - Brian Huntley
இவர் தன்னுடைய பயணத்தை மிகவும் சுவாரஸ்யமாக தனது தளத்தில் தெரிவித்துள்ளார்.
இவருடைய பயணத்தை தெரிந்து கொள்ள கீழே அழுத்தவும. Brian Huntley யின் சைக்கிள் பயணம்
ஓவ்வொரு மனிதருடைய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப மனிதன் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்கின்றான். இப்படியும் இந்த குளிர் நாட்டில் வாழலாம். நாம் எப்படி எங்களை தயார்படுத்தி கொள்கின்றோம் என்பதை பொறுத்து தான் எந்த தடையையும் வெல்வது தங்கியிருக்கின்றது. Read more...