November 22, 2008

எந்த வயதில் வாழ்க்கைத் துணை தேட...பதின்மர் வயதில் பருவ மிடுக்கில் கிடைத்த உறவு வாழ்க்கைத்துணையாகி விடுமா?
பள்ளிப் படிப்பில் பக்கத்தில் இருந்து பகிடி பண்ணியவன்(ள்) வாழ்க்கைத் துணையா?
கடைசி வாங்கில் களிசறை என்று வாத்தி கடிந்து கொண்டதால் கொண்ட அக்கறையால் கடைசி நாளில் காதலாகி வாழ்க்கைத் துணையாகுமா?
படிப்பேறாது என்று சொல்லி துடிப்போடு சொல்லி தந்த நட்பு வாழ்க்கைத் துணையாகுமா?
கண் காணா இடத்தில் இருந்து கணணி அரட்டை செய்தவன் வாழ்க்கைத் துணையாகுமா?

day2_london 549
வாழ்க்கைத் துணையாக இவன்/இவள் அமைந்து விடமாட்டார்களா என்று எம் வாழ்க்கைச் சக்கரத்தில் பல சந்தர்ப்பங்களில் எழத்தான் செய்கின்றன. இதில் எந்த வயதில் எம் எண்ணங்களுக்கு நாமாகவே ஒரு வடிவம் கொடுக்க முயல்கின்றோமோ அப்போது தான் உதயமாவது காதல் என்கிறார்களோ! இந்த எண்ணங்கள் வடிவம் பெறாமலே அழிந்துவிடுவது தான் அதிகம். இதற்கு எம் குடும்ப அமைப்பு, நண்பர்கள் உறவுகளின் அனுபவங்கள் எங்கள் எண்ணங்களை பாதிக்கின்றன.எனக்கு தெரிந்த அனுபவங்கள் சிலவற்றை கதாபாத்திரங்களின் பெயரை மாற்றி தருகின்றேன்.

அகிலன் ஒரு பொறியியல் மாணவன், அவனைக் கண்டால் ஜொள்ளு விடாத கல்லூரி மாணவி கிடையாது. இவன் ஒரு முற்போக்கு சிந்தனையுடையவன். கடைத்தெருவிற்கு போனால் கல்யாணமான பெண்கள் கூட அவனை சுகம் விசாரிக்காமல் போவது கிடையாது. பெற்றோர் வாழ்க்கைத்துணை தேடுவதில் இவனுக்கு முழும் சுதந்திரம் கொடுத்திருந்தார்கள். நட்புகளுக்கு காதல் தூதுவனும் இவன் தான்.

ஆயினும் அகிலனுக்கு நிறைய தெரிவுகள் இருந்ததோ என்னவோ தனக்கு வாழ்க்கைத் துணை தேடுவதில் குழப்பம் தான். அவன் அடிக்கடி விதவைக்கு வாழ்க்கை கொடுக்க வேண்டும் என்று சொல்வான். அவனுடைய சகோதர சகோதரிகள் எல்லோரும் காதல் திருமணம் தான். காலங்கள் ஓடின, கல்லூரி வாழ்க்கை முடிந்தது. வேலை தேட சென்னை வந்து தங்கினான். உணவுக்காக ஒரு யாழ்ப்பாணத்து குடும்பத்தினரிடம் வந்து பணம் கொடுத்து சாப்பிட்டு வந்தான். சாப்பாடு செய்து கொடுத்த அன்ரிக்கு பெடியனை பிடித்துப் போட்டுது. தன் குடும்பத்திற்குள் மாப்பிள்ளையாக்க எண்ணி தனது லண்டனில் இருக்கும் மகளின் படத்தை காட்டி அகிலனிடம் விருப்பம் இருந்தால் சொல்லச் சொன்னார். பெண் அழகாய் இருந்ததாலும் அன்ரியின் பண்பு பிடித்திருந்ததால் அவனும் லண்டன் பிள்ளையுடன் பேசிவிட்டு முடிவு சொல்வதாகச் சொன்னான்.

லண்டன் பிள்ளையுடன் பேசிய பின் திருப்திப் பட்டு சீதனம் எதுவும் வேண்டாம் என்று சொல்லித்தான் கல்யாணத்திற்கு உடன் பட்டான். அகிலனுக்கு புத்துணர்வு பிறந்து விட்டது. லண்டன் தொலைபேசி அழைப்பு வராதோ என்ற ஏக்கம் தான் எப்போதும், நாட்கள் செல்ல செல்ல லண்டன் மணமகள் அகிலனுடனான சம்பாசனை நேரத்தை குறைத்தாள். அகிலன் அழைத்தால் அவள் ஏதாவது நொண்டி சாட்டுச் சொல்லி தட்டிக் கழித்து விடுவாள். எப்போதும் சிரித்த முகத்துடன் இருந்த அகிலன் பேயறைந்தது போல் முகத்தை வைத்துக் கொண்டிருந்தான். நண்பர்களிடம் தன்னிலையை சொல்லிக் குறைப்பட்டுக் கொண்டான். ஏன் அவளுடன் பேச வேண்டும் அவளுக்கு என்ன தான் தவறு செய்தேன் என்று என்னை புறக்கணிக்கின்றாள் என்பது அவனது புலம்பல். பெண்ணின் தாயாருடன் மனம் விட்டு பிரச்சனையை சொன்னான். தாய் மகளை தொலை பேசியில் அழைத்து என்னவென்று வினவ " சீதனம் இல்லாமல் ஒரு இஞ்சினியர் கல்யாணம் கட்ட வருவதால், அகிலனுக்கு ஆண்மை இல்லை என்று சொல்லிவிட்டாள்". தாய் ஆத்திரத்தில் போனை வைத்துவிட்டு " அவள் இனிமேல் எனக்கு பிள்ளை இல்லை தம்பி, உங்களைப் போய் தரக்குறைவாச் சொல்லிறாள், என்னை மன்னிச்சு போடுங்கோ, வெளி நாட்டுக்கு போய் அவள் இப்படி மாறுவாள் என்று எனக்குத் தெரியாது.

அகிலனின் நண்பர்கள் பெண்ணைப் பற்றி விசாரித்த போது தான் தெரிந்தது அவளுக்கு இலண்டனில் காதலன் ஒருவன் நீண்டகாலம் இருப்பதை. தனது காதலை மறைத்துக் கொண்டு இஞ்சினியர் மாப்பிள்ளை எடுக்க முற்பட்டு காதலினால் மனமாற்றப்பட்டு பின்பு பேசிய மாப்பிள்ளைக்கு டாட்டா காட்டிவிட்டாள்.

அகிலன் யாருக்கும் தீங்கு விளைவித்திருக்க மாட்டான். அவனுக்குள் ஒரு ஏமாற்றம். கல்லூரியில் எல்லோருக்கும் கதாநாயகனாக இருந்தவன் நிலை மிகவும் தர்ம சங்கடமாகிவிட்டது. திருமணம் செயவது என்றால் சீதனம் வேண்டித்தான் திருமணம் செய்வதாக முடிவெடுத்தான். அதே மாதிரி சீதனம் வேண்டித்தான் திருமணம் செய்தான். ஒரு காலத்தில் சீதனம் வேண்டக் கூடாது, விதவைக்கு வாழ்வு கொடுக்க வேண்டும் என்றவனின் வாழ்க்கைத் தெரிவு எப்படி மாறியது.

எந்த வயதில் காதலிப்பது என்பது முக்கியமல்ல, எந்தளவு புரிந்துணர்வு இருப்பதில் தான் தங்கியிருக்கின்றது. சின்ன வயதில் காதலிக்கும் போது ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ குறுகிய தெரிவுகள் தான் கிடைக்கும், பின்னாளில் அந்த ஆணோ/ பெண்ணோ வெற்றி அடைவார்கள் என்று திட்ட வட்டமாக சொல்லி விடமுடியாது. ஆணோ பெண்ணோ வெற்றி பெற தவறினால் சில காதல்கள் முறிவடைந்து விடுகின்றன.

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று சொன்னாலும் அனேகமாக ரொக்கத்தில் தான் நிச்சயிக்கப் படுகின்றன. கல்லூரி நாட்களில் கொண்டு திரிய பல காதல்கள் தோன்றினாலும், பண வருவாயை மனதில் வைத்து தான் இன்றைய அனேகமான வாழ்க்கைத் துணைகள் தேடப்படுகின்றன.

உங்களுடைய பார்வையையும் தாருங்கள்


10 comments:

தமிழன்-கறுப்பி... 2:42 AM  

தெளிவான காதல் பணத்தையும் எதிர்கொள்கிறது,காத்திருந்து காலம் கைகொடுக்கையில் கைப்பிடிக்கிறார்கள் என்பது என் கருத்து...


{நான் காதலுக்குத்தான் சப்போர்ட் எண்டு சனம் நினைக்குது... அதனால இந்த பின்னூட்டம்...;)

தமிழன்-கறுப்பி... 2:51 AM  

இது அவரவரைப்பொறுத்தது...
வாங்கக்கூடாது என்கிற முடிவுகள் இருந்தும் சூழ்நிலைகள் சில விசயங்களை நிர்ப்பந்திக்கின்றன..

நானறிய சிலருக்கு இது நிகழ்ந்திருக்கிறது...

ஹேமா, 5:32 AM  

காரூரன் உண்மையில் பிரயோசனமான பதிவு.மனதைப் புரிந்துகொள்வதே உண்மையான காதல்.பணத்தையும் அழகையும் வெளிநாட்டையும் அல்ல.

காரூரன் 8:15 PM  

தமிழன்,

உங்களிடம் வெற்றி பெற்ற காதலுக்கு உதாரணம் கேட்டால், விரல் விட்டுத்தான் எண்ணலாம். ஆனால் மாறாக தோற்றவர்கள் லிஷ்ட் நீண்டு கொண்டு செல்லும்.. ஏன் காதலில் வெற்றி பெற்றவர்கள் என்பவர்கள் பலரை ஏமாற்றிய பின் கடைசியாக மாட்டியதை காதல் என்பார்கள். உண்மையாக காதலித்து வெற்றி பெற்றவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் எனக்கு அடிக்க வராட்டால் சரி...

காரூரன் 8:18 PM  

ஹேமா,
வலயப்பக்கங்கள் போய் பார்த்தால் தான் தெரியும் நொந்தவர்கள் எவ்வளவு என்று.

கோவி.கண்ணன் 12:56 AM  

திருமணம் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது. மனமுறிவுகள் நரகத்தால் நிச்சயிக்கப்படுகிறதா ?
:)

மெல்போர்ன் கமல் 4:23 AM  

எந்த வயதில் காதலிப்பது என்பது முக்கியமல்ல, எந்தளவு புரிந்துணர்வு இருப்பதில் தான் தங்கியிருக்கின்றது. சின்ன வயதில் காதலிக்கும் போது ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ குறுகிய தெரிவுகள் தான் கிடைக்கும், பின்னாளில் அந்த ஆணோ/ பெண்ணோ வெற்றி அடைவார்கள் என்று திட்ட வட்டமாக சொல்லி விடமுடியாது. ஆணோ பெண்ணோ வெற்றி பெற தவறினால் சில காதல்கள் முறிவடைந்து விடுகின்றன.

ம்.....ஆஹா... நல்லா அட்வைஸ் முறையில எழிதியிருக்கிறீர்கள்.. ஓ எல்லாம் அநுபவம் தானோ?????

காரூரன் 8:25 PM  

கோவிக் கண்ணன்,
*\\திருமணம் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது. மனமுறிவுகள் நரகத்தால் நிச்சயிக்கப்படுகிறதா ? \\*

மனமுறிவுகள் எல்லாவற்றிற்கும் காரணம் அறிய முடியவில்லை. ஆண்கள் இந்த விடயத்தில் பாவப்பட்டவர் போலும்!
வருகைக்கு நன்றிகள். வந்து விமர்சியுங்கள்.. அப்போது தான் நாமும் கொஞ்சம் வளரலாம்.

காரூரன் 8:30 PM  

வாங்க மெல்போர்ன் கமல்,

அனுபவம் தான் ஆனால் என்னுடையது அல்ல, என் நண்பனினுடையது. உங்களைப் போல் உள்ள இளையோருக்கு ஒரு தக்வல். அவ்வளவு தான். வருகைக்கு நன்றிகள்

Chithran 10:10 PM  

Just started reading......, interesting.......

Blog Widget by LinkWithin

அறி(வு)முகம்!

என்றும் எப்போதும் இங்கு வருவோர்க்கு இன்முகமாய் உங்கள் அறி(வு)முகம்!

எங்களின் வாழ்க்கை எங்கே????

நினைவுகளோடு பயணித்த படி நிஜங்களைத் தேடுபவர்களில் நானும் ஒருவன்!

  © Free Blogger Templates Spain by Ourblogtemplates.com 2008

Back to TOP