September 28, 2008

கனடிய தமிழ் இளையோரின் உண்ணா நோன்பு.


தியாக தீபம் திலீபன் அண்ணாவின் 21ம் ஆண்டு நினைவு நாளில் ஆரம்பித்த 30 மணி நேர உண்ணா நோன்பை மறு நாள் இரவு 10 மணியளவில் மிகவும் உணர்ச்சி தழும்பும் ஒரு நிகழ்வாக நடத்தி முடித்தார்கள். இந்த நோன்பு பல இளையோரின் நினைவுகளை பகிர்ந்து கொண்ட ஒரு முக்கிய நிகழ்வாகவே நான் கருதுகின்றேன்.

பல மேடைகளை கண்ட, அரசியல் ஆய்வுகளை தந்தவர்களை விட இந்த கனடிய தமிழ் இளையோரின் கருத்து பரிமாற்றம், உண்மையான உணர்வு பூர்வமானவையாகவே இருந்தது. பலரின் கண்களை கலங்க வைத்தது என்பது மறுக்கமுடியாத ஒன்று.

உண்ணாவிரதம் ஆவணி 26ம் திகதி பிற்பகல் 4:00 மணிக்கு கனடா ரிச்மண்ட் பிள்ளையார் மண்டபத்தில் ஆரம்பித்தது. 40 மேற்பட்ட இளையோருடன், வயதால் முதிர்ந்தாலும் உணர்வுளால் என்றும் இளமையாக இருப்பவர்களும் கலந்து இருந்தனர். தண்ணீர் மாத்திரமே உட்கொண்டு இருக்கும் விரதமாக முயற்சி எடுக்கப்பட்டிருந்தாலும், பல இளையோர் தண்ணீர் கூட அருந்தாமல் இந்த விரதத்தில் ஈடுபட்டிருந்தது அவர்களுடைய உணர்வு பூர்வமான ஈடுபாட்டை வெளிக்காட்டியிருந்தது. ஒரு சிலர் மௌன விரதமும் செய்தார்கள். இவர்களை ஊக்குவிக்க பலர் வந்து போய்க் கொண்டிருந்தார்கள். நிகழ்ச்சியில் இறுதி மணி நேரங்களில் "தாய் மடி காப்போம்" என்றும் முழங்கி நிற்கும் வானம் பாடிகள் உணர்ச்சி பாடல்களை பாடி நிகழ்வுக்கு மேலும் மெருகேற்றியிருந்தனர்.



வன்னியில் இருக்க இடமில்லாமல், குடிக்க குடிகூட‌ நீர் இல்லாமல், அடிப்படை வசதிகளே இல்லாமல் அல்லல்படும் மக்களுக்காக இளையோர் பலர் தம் உணர்வுகளை பகிர்ந்து, பேசுவதுடன் நின்று விடாமல் தொடர்ந்து தமிழ் மக்களை ஒன்றிணைத்து உதவிகள் சென்றடைய செய்கிறார்கள்.


இளையவள் ஒருத்தி தன் நினைவுப் பகர்வில் தன்னுடைய வன்னிப் பயணத்தையும், தான் கற்றுக் கொண்ட வாழ்க்கைப் பயணத்தையும் அங்கு வந்திருந்தவர்களின் மனதில் விழிப்பை ஏற்படுத்தும் வகையில், இளையவரின் பங்கு ஏன் முக்கியமானது, பெற்றோர்களின் பங்கு என்ன என்பதை மிகவும் உணர்ச்சி வசப்பட்டு விளக்கியிருந்தாள். யோர்க் பல்கலைக்கழகத்தின் தெற்கு ஆசிய மாணவர் தலவனும் நிகழ்வில் வந்து வாழ்த்தி சென்றிருந்தார்.

மேற்குலக அரசியல் தலவர்கள் யாரும் அழைக்கப்படவில்லை. அவர்கள் எம்மை வைத்து ஆதாயம் தேடும் தளங்களாகவே அனேகமான நிக்ழவுகளில் நடந்து கொண்டிருக்கிறார்கள். இது தேர்தல் காலமும் கூட. இளைவர்களின் இந்த முன்னுதராணம் மற்றவர்களும் விளங்கிக் கொள்ள வேண்டிய காலம் இது.


இலட்சக்கணக்கான புலம் பெயர்ந்து வாழ்போர் மத்தியில் கலந்து கொண்டவர்களின் பங்களிப்பு குறைவானதாக இருந்தாலும் இது ஆரம்பம் முடிவல்ல என்பதால், வரும் காலங்களில் உலகளாவிய தமிழ் மக்களின் பங்களிப்பு இந்த விடியலை தேடி நிற்கும் மக்களுக்காக கைகோர்க்கும் என்று நம்புவோமாக!



3 comments:

ers 12:30 PM  

திலிபனின் தியாகம் தமிழ் ஈழத்தை பெற்றுத்தரட்டும்... இவர்களின் உண்ணாநோன்பு உலகத்தை தமிழர் பால் ஈர்க்கட்டும்...

தமிழன்-கறுப்பி... 1:15 PM  

நல்ல விசயம்!
நல்லது நடக்க வேண்டும்...

திலீபனுக்கென்று ஈழத்தவர்களிடம் ஒரு தனி இடம் இருக்கிறது..

தன் உணர்வுகளை கட்டுப்படுத்தி தேசிய உணர்வை வளர்த்த ஒருவன் அவன் ஒரு அர்த்தமுள்ள போராளி...

காரூரன் 11:23 PM  

நன்றி தமிழன், தமிழ் சினிமா இருவருக்கும்.

Blog Widget by LinkWithin

அறி(வு)முகம்!

என்றும் எப்போதும் இங்கு வருவோர்க்கு இன்முகமாய் உங்கள் அறி(வு)முகம்!

எங்களின் வாழ்க்கை எங்கே????

நினைவுகளோடு பயணித்த படி நிஜங்களைத் தேடுபவர்களில் நானும் ஒருவன்!

  © Free Blogger Templates Spain by Ourblogtemplates.com 2008

Back to TOP