October 11, 2008

பழக்கமும் வழக்கமும்..


"தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்" என்று ஒரு பழமொழியில் சொல்லி இருந்தாலும் பழக்கம் என்பது நாம் வாழும் சூழல், பழகிய மனிதர்கள், கல்வி வாய்ப்புகள் போன்ற பல காரணிகளை கொண்டுள்ளது.

"சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடாது " என்பர் சான்றோர். இங்கு ஒரு விலங்கினுடைய பழக்கம் கூட மாற்றப்படும் தனக்கு பாதிப்பு இருக்கும் என்று தெரிந்தால். மனித பழக்க வழக்கங்கள் மாற்றப் பட வேண்டுமாயின், அவனுடைய செய்கையால் அவனுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்க வேண்டும்.

நம்மூரில் வாழும் காலங்களில், நாம் மறைவாக ஒரு காரியம் செய்து விட்டு தப்பி விட முடியாது. நமது சுற்றத்தாரும் உறவுகளும் அறிந்து வீட்டுக்கு விடயம் வந்து விடும். மேல் நாடுகளில் வாழ்பவர்களுக்கு அப்படியல்ல. அதனால் தான் என்னவோ சில இளையவர்கள் தங்களுக்கு நிறைய சுதந்திரம் இருப்பதாக எண்ணி தங்கள் அடையாளங்களை தொலைத்து விடுவார்கள்.

ஒளவை கூட

" சித்திரமும் கைப்பழக்கம்
செந்தமிழும் நாப் பழக்கம்
வைத்த தொரு கல்வி மனப் பழக்கம்
தினமும் நடை நடைப் பழக்கம்
நட்பும் தயை கொடையும் பிறவிக்குணம்."


என்கின்றாள். ( கேள்வி ஞானத்தில் எழுதியது, வார்த்தை தவறுகள் இருக்கலாம்.)

என்னதான் பழக்கம் பலவற்றிற்கு காரணமாக இருந்தாலும், சில பிறவிக்குணங்களும் மனித இயல்பை ஆட்டி படைக்கின்றன.

வழக்கம் என்பது எதையும் ஆராயாமல் மற்றவர்கள் செய்வதைப் போல் செய்யும் முயற்சிகள். இந்த முயற்சிகளில் பல பழமை வாதங்கள் கலந்திருக்கின்றன. அதற்காக பழமை வாதங்களை எதிர்ப்பவர்கள் எல்லாம் புதுமை வாதிகளாகி விட முடியாது.

நாம் நல்ல பழக்க வழக்கமாக வாழ விரும்பினால் " சகிப்புத்தன்மை, புரிந்துணர்தல், விட்டு கொடுத்தல் " போன்ற பண்புகளை வளர்க்க முயற்சிக்க வேண்டும். நான் தமிழ் நாட்டுக் கிராமங்களிற்கு சென்ற போது சில பழக்க வழக்கங்களை பார்த்து ஆச்சரியப்பட்டதுண்டு. முகவரி தேடி குக்கிராமத்திலுள்ள ஓர் கொட்டிலில் இருந்த தேனீர்க் கடை சென்று வினவிய போது, தேனீர் அருந்திக் கொண்டிருந்த ஒரு முதியவர் என்னைப் பார்த்து முகவரியை கூறிவிட்டு " சார் ரீ சாப்பிறீங்களா!" என்று வினவினார். ஓரிரு நிமிட சம்பாசனையின் பின் என்னை ஒரு விருந்தினனாக நடத்திய விதம் என்னை நெகிழ வைத்தது.

நம்பிக்கையுடன் பழகுபவர்கள் தான் ஏமாற்றப்படுவார்கள், ஏமாற்றுபவர்கள் இன்னொருவரை தொடர்ந்து ஏமாற்றலாம் என்ற நம்பிக்கையுடன் பழகுவார்கள்.

பழக்க வழக்கத்தைப் பற்றிய உங்கள் பார்வையும் தாருங்கள்.


9 comments:

தமிழன்... 3:38 PM  

நான் நல்லவன் கிடையாது அப்படிங்கிற உண்மையயை ஆரம்பத்திலயே சொல்லிடுவேன்...:)

காரூரன் 8:23 PM  

தம்பி,
இப்படி சொல்வதே பெரிய விசயம். எப்படியோ ....
நன்றிகள்!.

இசக்கிமுத்து 4:30 AM  

நம்முடைய பழக்கங்கள் மற்றவர்க்கு தொந்தரவு கொடுக்காமல் இருந்தால் அதுவே நல்ல வழக்கம்...

ஹேமா 1:11 PM  

வணக்கம் காரூரன்.தமிழின் அழகுப் பெயரோடு அருமையான பதிவுகள்.

இன்றைய காலகட்டத்தில் இளகிய மனம்,இரங்கிய மனம் இருக்கக்கூடாது.மனதை இறுக்கமாக வைத்திருப்பதே நல்லது.யாரையும் நம்பமுடியவில்லை.
பயம்ம்ம்...மாயிருக்கு.
காலைப்பிடிக்கிறார்களா கவிழ்க்கப் பார்க்கிறார்களா தெரியவேயில்லை.

காரூரன் 2:24 PM  

ஹேமா,

*\\ மனதை இறுக்கமாக வைத்திருப்பதே நல்லது.யாரையும் நம்பமுடியவில்லை.\\*
அதை அனுபவ ரீதியாக உணர்கின்றேன். பழகியது 10 நிமிடங்கள் என்றாலும் அடி மனத்து உணர்வுகளுடன் பழகி இருப்பதால் எனக்கு எப்போதும் திருப்தி உண்டு. உங்கள் கருத்துப் பகிர்வுக்கு நன்றிகள்.

ராஜ நடராஜன் 6:13 AM  

//"சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடாது "//

இப்படித்தான் வீட்ல ஒரு முறை தெரியாம பாலைக் கொஞ்சம் சூடா வச்சதுல வழக்கம் போல பாலுக்கு ஓடியாரும் பூனை அன்னைக்கு பாலைக் கடைசியா தொட்டதுதான் பாவம்:)

காரூரன் 6:05 PM  

நன்றி ராஜ நடராஜன் உங்கள் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்.

rahini 2:11 AM  

nalla pakirvu arumai

காரூரன் 10:48 AM  

நன்றி ராகினி!

Blog Widget by LinkWithin

அறி(வு)முகம்!

என்றும் எப்போதும் இங்கு வருவோர்க்கு இன்முகமாய் உங்கள் அறி(வு)முகம்!

எங்களின் வாழ்க்கை எங்கே????

நினைவுகளோடு பயணித்த படி நிஜங்களைத் தேடுபவர்களில் நானும் ஒருவன்!

  © Free Blogger Templates Spain by Ourblogtemplates.com 2008

Back to TOP