புற(க்)கணிப்புக்கள் ......
வாழ்வியலில் அன்றாடம் பல மனிதர்களுடன் பல மட்டங்களில் பழகுகின்றோம். மேற்குலகில் வாழுபுவர்கள் பல்வேறு மனிதர்களால், அவர்களின் புற கணிப்புகளினால் புறக்கணிக்கப்படுவதை பார்த்து, உணர்ந்து அறிந்திருப்போம். நாம் வந்தேறு குடிகள் என்பதால் சகிப்புத்தன்மையுடன் அதை அனுசரித்து வாழ பழகிவிடுகின்றோம். ஆனால் நம் நெருங்கிய உறவுகள் நம்மை புறக்கணிக்கும் போது அது வலியாகத் தெரிகின்றது.
கீழே உள்ள படத்தை பாருங்கள்..
படத்தை சிறிய அளவில் பார்த்தால் (CN TOWER) இல் வீதி விளக்கு இணைக்கப்பட்டது போல் தோன்றும். ஆனால் இந்த வீதி விளக்கு கிட்டத்தட்ட 100 அடி தள்ளி இருக்கும் வீதிக்கம்பமும் விளக்கும். இதைப்போல் ஒருவரை பற்றிய புற கணிப்பை அவசர பட்டு கணித்து விடுவார்கள். ஓருசிலர் மற்றவர்களின் உந்துதால் தங்களை அறியாமலேயே ஒரு சிலரை புறக்கணித்து விடுகிறார்கள்.
எனக்கு ஒரு ஆசிரியர் சொன்னார் போட்டிக்கும் பொறாமைக்கும் உள்ள வித்தியாசம்:
" போட்டி என்றால் நல்ல நிலையில் உள்ள ஓருவரின் நிலைக்கு நாம் செல்ல முயற்சிக்கும் உந்துதல், மாறாக பொறாமை என்பது நல்ல நிலையில் இருப்பவரை தன் நிலைக்கோ அல்லது அதன் கீழ் நிலைக்கோ கொண்டுவர நினைக்கும் மன உந்துதல்"
போட்டிக்கும் பொறாமைக்கும் இடையில் வித்தியாசம் தெரியாமல் வாழுபவர்கள் பலர். பொறாமையின் அடிப்படையிலேயே மேற்குலகில் வாழ்போர் பலர் தம் உறவுகளை புறக்கணிக்கின்றார்கள். ஒரு சிலருக்கு ஒருவரிடம் நேரடியாக முரண்பட்டு கொள்ள முடியாதபோது இதற்காக இடையில் உள்ளவர்களின் பலவீனங்களை அடையாளம் கண்டு கொண்டு அவர்கள் மூலம் முரண்பட்டு கொள்கின்றார்கள். அவர்களை இடையில் மாட்டிவிட்டு தாம் நல்ல பிள்ளைகள் போல் நடந்து கொள்வார்கள்.
நாம் தெரிந்தோ தெரியாமலோ யாரையாவது புறக்கணித்திருக்கலாம். நாம் புறக்கணித்து விட்டோமோ என்று உணர்ந்தால் மனம் விட்டு உறவுடன் உரையாடுவதை விட தீர்வு எதுவும் இருந்து விடாது.
கவியரசு வைரமுத்து தன் தாயை பற்றி...,
முதன்முதலாய் அம்மாவிற்கு,
ஆயிரம் தான் கவி சொன்னாய்
அழகழகாய் பொய் சொன்னாய்
பெத்தவளே உன் பெருமை ஒற்றை வரி சொல்லலையே
காற்றெல்லாம் மகன் பாட்டு
காகிதத்தில் அவன் எழுத்து
ஊரெல்லாம் மகன் பேச்சு
உன் கீர்த்தி எழுதல்லையே
எழுதவோ படிக்கவோ ஏலாத தாய் பற்றி
எழுதி என்ன லாபம் என்று
எழுதாமல் போனேனோ
என்று தன் தாயை தான் புறக்கணித்து விட்டேனோ என எண்ணி வார்த்தைகளை வடித்திருக்கின்றார்.
தேவைகளுக்கு மாத்திரம் உறவுகள் என்று இல்லாமல், உறவுகளும் தேவை என்று எண்ணும் போது தான் அவசியமில்லாத புறக்கணிப்புக்கள் அகன்றுவிடும்.
பனைமரத்தின் கீழ் இருந்து பால் குடித்தால் "பார்ப்பவரின் தவறா அல்லது குடித்தவரின் தவறா?"
புற கணிப்பை பற்றியும் புறக்கணிப்பை பற்றியும் உங்கள் எண்ணங்களையும் தாருங்கள்.
2 comments:
\\பனைமரத்தின் கீழ் இருந்து பால் குடித்தால் "பார்ப்பவரின் தவறா அல்லது குடித்தவரின் தவறா?"\\
:-)
வாங்க சினேகிதி!
Post a Comment