May 23, 2010

நீதி கேட்டு நிற்கும் சுரேசுக்கு உதவுங்கள்!


Suresh

தமிழனுக்கு அடையாளம் தந்த தானத் தலைவன் பிறந்த மண்ணில் பிறந்து, சிறிய வயதில் இராணுவக் கொடுமைகளால் பாதிக்கப் பட்டு, மற்றவர்களின் கஸ்டங்களை உணர்ந்து வளர்ந்தவன் இவன். பெற்றோருடன் புலம் பெயர்ந்து , கனடிய மண்ணில் தான் சாதிக்க வேண்டும் என்று கல்வியிலும் பொதுத் தொண்டுகளிலும் தன் ஆர்வத்தை காட்டினான். பாடசாலை நாட்களில் ஆசிரியர்கள் போற்றும் முதன்மை மாணவனாகத் திகழ்ந்தான்.

கனடாவில் புகழ்பெற்ற வாட்டலூ பல்கலைக்கழகத்தில் இலத்திரனியல் இளமானி பட்டத்தையும் , 2008 இல் வில்வெர்ட் லோறியர் பல்கலைக் கழகத்தில் கலைத்துறைப் பட்டத்தையும்(B.A.), அதன் பின் அதே பலகலைக் கழகத்தில் வணிக முகாமைத்துவ முதுமானிப் பட்டத்தையும்(MBA) பெற்றுக் கொண்டான்.


Microsoft,RIM, Amazon,NVIDI போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களில் பணி புரிந்தார்.

2004 ஆம் ஆண்டில் ஈழம் செல்லும் ஒரு வாய்ப்பு இவனுக்கு கிடைத்தது. அங்கு வாழும் சிறுவர்களின் வாழ்வியியல் இவனை மிகவும் பாதித்திருந்தது. ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் மறக்காமல் அதற்கான உதவிகளையும் செய்தான். வன்னிடெக் என்று ஈழத்தில் எடுக்கப் பட்ட முயற்சிகளுக்கு கணினி, தொழில் நுட்பம் தந்து உதவினான். சுனாமியின் போது அங்கு சென்று உதவிகள் செய்தான்

சுனாமியின் போது


ஈழத்தில் குழந்தைகளுடன்.


21-08-2006 இல் அமெரிக்கப் புலனாய்வுத் துறையின் வேண்டுகோளுக்கு இணங்க கனடிய காவல் துறையினரால் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ், கனடாவில் இவரை கைது செய்தது. தடை செய்யப் பட்ட ஓர் பயங்கார அமைப்பிற்கு ( தமிழீழ விடுதலைப் புலிகள்) உதவினார் என்பது தான் இவர் மீதுள்ள குற்றச் சாட்டு. ஆயினும் இந்தப் பொழுதில் கனடாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஓர் தடைப்பட்ட இயக்கம் அல்ல. கனடிய காவல் துறையினர் கனடிய சட்டத்தின் கீழ் எந்த வொரு வழக்கையும் தொடரவில்லை. ஆயினும் அமெரிக்க அரசினால் தொடங்கப் பட்ட வழக்கு தொடர்பாகவே இவர் கனடாவில் கைது செய்யப்பட்டார். இவர் தன்னை கனடாவில் வைத்து விசாரிக்கும் படி பல முறை விண்ணப்பியிருந்தார். இவரின் கல்வித் தகமை அடிப்படையிலும் நன்னடத்தை அடிப்படையிலும் பிணையில் வெளியே வர அனுமதித்தது. ஆயினும், வழக்கு நிலுவையில் இருக்கும் ஒருவருக்கு வேலை தர எந்த நிறுவனங்களும் முன் வரவில்லை. இவர் குடும்பம் , இவரது வழக்கு தொடர்பாக நிதி நிலையில் மிகவும் சிக்கலான நிலையில் உள்ளார்கள்.

இவருக்கு புகழ் பெற்ற, அனுபவம் கொண்ட சட்ட வல்லுனர்கள் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.

Bruce Fein - Suresh Legal Team

இவருக்கு உறுதுணையாக இருக்கும் உறவுகளும் நட்புகளும்.

அவனது குடும்பம்


Family and Friends - Justice for Suresh Team


இந்த துடிப்பான இளையனின் மேல் தொடரப் பட்ட வழக்கு ஒரு இனத்தின் எதிர்காலத்தைக் கேள்விக் குறிக்காக்கும் ஒரு முயற்சியாக அமைந்து விடக் கூடாது. உலகளாக ரீதியில் முன் வந்து, இதை வெற்றி கொண்டு, இப்படியான நிலைமைகள் உருவாகாமல் தடுக்க வேண்டும்.

இவ்வளவு சிக்கல்களின் மத்தியிலும் நிதானமாக எல்லோரையும் இன் முகத்துடன் நடத்தும் இச்சகோதரனுக்கு எல்லோரும் உதவ முன் வரவேண்டும். சிறு துளி பெரு வெள்ளம்.

நீங்கள் உதவ விரும்பினால், உங்கள் காசோலைகளை அனுப்ப வேண்டிய முகவரி.

Justice for Suresh

38064- 256 King St. North,
Waterloo, Ontario N2J 2Y9
Canada.

For Additional Information

A9 Memories.com
Justice for Suresh




Read more...
Blog Widget by LinkWithin

அறி(வு)முகம்!

என்றும் எப்போதும் இங்கு வருவோர்க்கு இன்முகமாய் உங்கள் அறி(வு)முகம்!

எங்களின் வாழ்க்கை எங்கே????

நினைவுகளோடு பயணித்த படி நிஜங்களைத் தேடுபவர்களில் நானும் ஒருவன்!

  © Free Blogger Templates Spain by Ourblogtemplates.com 2008

Back to TOP