சமூகக் கண்ணோட்டம்
நான் சொன்னால் நம்பமாட்டியள், கனடாவிலை தமிழர்களின் விழாக்களுக்கு குறைச்சல் இல்லை பாருங்கோ. இதுக்குள்ள ஆளாளுக்கு போட்டி பாருங்கோ. ஒரு சிலர் சொல்லுவினம் நாங்கள் தேசியத்திற்காக செய்யிறம் என்றும் இன்னும் சிலர் உள்ளூர் கலைஞர்களை வளர்க்கிறதுக்கெண்டும் சொல்லுகினம். இன்னும் சிலர் மக்களை திருப்திபடுத்த வெளிநாட்டு கலைஞர்களை கொண்டு வந்து செய்யிறம் என்கினம்.
தேசியம், தேசியம் பற்றிய எண்ணங்கள் வளரோணும் அதிலை மாற்று கருத்தில்லை. இந்த மாதிரி நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்களை மக்களுக்கு கொண்டுபோய் சேர்க்கிறதிற்கு ஊடகங்கள் பெரும் பங்காற்றுகின்றன.
இதிலை பெரிய புதினம் என்னவென்றால் எல்லா நிகழ்ச்சிகளை பற்றியும் எல்லா ஊடகங்களிலும் காசு கொடுத்தாலும் போடமாட்டினம்.தாங்கள் நடத்துகின்ற நிகழ்ச்சிக்கு போட்டி என்று நினைத்தால் அது சகோதர அமைப்பாக இருந்தாலும் இருட்டடிப்பு தான்.
இந்த மாதிரியான நடவடிக்கைகள் ஒரு ஊடகத்தின் பொதுக்கோட்பாடுகளுக்கு முரணானதும் சிறுபிள்ளைத்தனமானதுமான நடவடிக்கையாகும். இவ்வூடகங்களில் உள்ளோர் தாம் கனடிய நீரோட்டத்திலுள்ள ஆங்கில ஊடகங்களுக்கு நிகராக வள்ர்ந்து விட்டதாக மார் தட்டவும் மறப்பதில்லை.
இந்த மாதிரியான நடவடிக்கைகளுக்கு தாங்கள் மக்கள் ஊடகம் என்பதை மறந்து ஒரு சில தனிப்பட்டவர்களின் முடிவுகளுக்கு கேள்வி கேட்க யாருமில்லை என்ற ஒரு எண்ணமோ அல்லது தாம் வளர்ந்து விட்டோம் இனிமேல் ஒருவருடைய தயவும் தேவையில்லை என்ற எண்ணமோ?
நானறிய, சுமார் 12 ஆண்டுகளுக்கு மேலாக கனடிய மண்ணில் தேசியம் சம்பந்தமான பல விழாக்களை வெற்றியாக நடத்திய ஒருவர் தனது புத்தக வெளியீட்டு விழாவிற்கு விளம்பரம் தர ஒரு தேசிய நீரோட்டதுடன் இருக்கும் பத்திரிகை ஆசிரியர் அனுமதி மறுத்துவிட்டார்.
இப்படியான போட்டிகளும் பொறாமைகளும் ஈழத்தமிழர்களாகிய எங்களுடைய விடிவுக்கு ஒரு தடைக்கல்லாக அமைந்து விடுகின்றது.
நாம் ஒரு முக்கியமான கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம், எல்லாத்தமிழர்களையும் ஒருமுகப்படுத்தி கொண்டு செல்லவேண்டிய கடமை எல்லா தமிழ் ஊடகங்களுக்கும் உண்டு.
4 comments:
நானும் கேள்விப்பட்டிருக்கின்றேன். போட்டி என்ற போர்வையில் ஒருத்தர் இன்னொருத்தரை வளர்க்கின்றார். தங்கள் பிழைப்புக்காக ஜால்றா அடிப்பவர்கள் இருக்கும் வரை எந்த ராமன் ஆண்டாலும் கண்டு கொள்ள மாட்டார்கள்.
நலன் விரும்பி
தங்கள் வருகைக்கும் குறிப்புக்கும் நன்றி நலன் விரும்பி
அனொனியாக வந்திருக்கிறீர்கள்
காரூரன்,
நமது சமுதாயத்திற்கு இது ஒரு சாபக்கேடு. போட்டியும், பொறாமையும்... அதுமட்டுமன்றி, நாம் ஏன் பிறந்தோம் எதற்காக வாழ்கிறோம் என்று நினைத்துப் பார்ப்பவர்களாகவும் இல்லை... எது செய்தாலும் போலிப் பகட்டுக்கும், பெயருக்காகவுமே பெரும்பான்மையானவர்கள் செய்கிறார்கள். நாம் சாகும்போது அந்தப் போலிப் பகட்டைக் கொண்டா செல்லப்போகிறோம்?
யூதர்களை எடுத்துப் பார்த்தீர்களானால் தமது சமுதாயத்தவனுக்கு உதவுவதில் அவர்கள் தான் முதலிடம். எமது சமுதாயத்தில் அவ்வாறில்லை... நாம் வெளி நாடு வந்துவிட்டோம்... நாம் பிளைத்துக்கொண்டால் சரி என்ற மன நிலையில் வாழ்கிறார்கள்.
உங்கள் பதிவுகளைத் தொடர்ந்தும் தாருங்கள்... எனக்குப் பதிவு எழுதும் அளவிற்கு தற்சமயம் நேரம் கிடைப்பதில்லை... நேரம் கிடைக்கையில் எழுதுகின்றேன்.
Haran,
நல்ல சமூக சிந்தனையுடன் பின்னூட்டம் செய்துள்ளீர்கள். அனுபவம் என்பது நாம் எப்படி விடயங்களை உள் வாங்குவதில் தான் உள்ளது. நீங்கள் எழுதிய "அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாள்" மிகவும் பிடித்திருந்தது. சில நண்பர்களுக்கு அனுப்பி அவர்களின் உள்ளக்கிடக்கையும் கேட்டறிந்தேன். நேரம் கிடைக்கும் போது எல்லாம் எழுதுகின்றேன். வாசித்து விமர்சியுங்கள்.
நன்றிகள்.
Post a Comment